கம்பராமாயணம் 3254 · ஆரணிய 7.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாரம் உண்டு எழுந்த மேகம் - நீரை அருந்தி எழுந்த முகில்களும்; தாமரை வளையம் - தாமரை மாலைகளும்; நானச் சாரம் உண்டு இருந்த - கஸ்தூரியின் சாரம் கலந்திருக்கின்ற; சீதச் சந்தனம் - குளிர்ந்த சந்தனமும்; தளிர் - தளிர்களும்; மென்தாதோடு - மென்மையான மகரந்தமும்; ஆரம் - குளிர்ந்த முத்துக்களும்; உண்டு - மேனியில் பூசப்பெற்றும்; எரிந்த சிந்தை அயர்கின்றான் - வெப்ப மிகுதியால் மனம் தளர்கின்ற இராவணன்; அயல் நின்றாரை - அருகில் நின்ற பணியாளரை நோக்கி, 'ஈரம் உண்டு என்பர் - நிலாவுக்குக் குளிர்ச்சி உண்டு என்கிறார்கள்; ஓடி - நீங்கள் விரைந்தோடி; இந்துவைக் கொணர்மின் - சந்திரனைக் கொண்டு வாருங்கள்; என்றான் - எனக் கட்டளையிட்டான்.
பருவ காலங்கள் அகன்ற பின் குளிர்ந்த பொருள்கள் எவையும் பயன்படாமல் போகச் சந்திரனைக் கொண்டு வர இராவணன் உத்தரவிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Clouds risen full of water, garlands of lotus, cool sandal paste
- steeped in the essence of musk, tender shoots with soft pollen,
- and pearls had all been applied, yet he languished, his mind on fire; to those who stood near
- he said, 'They say there is coolness in it; run and fetch the moon!'
What the poem says
With the seasons gone, his attendants try every cooling remedy: rain clouds, lotus garlands, sandal paste mixed with musk, tender leaves, pollen and strings of pearls are all applied to his body. None of it helps, and his mind still burns.
He then remembers that the moon is said to be cool, and orders his servants to run and bring the moon itself.