கம்பராமாயணம் 3256 · ஆரணிய 7.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செயிர் உற்ற அரசன் - பகைமை பாராட்டிய ஒரு மன்னவன்; ஆண்டு - ஒருக்கால், ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - மெலிவு வந்து ஆற்றல் குன்றிய நேரத்தில்; உடைந்து சென்றோர் வலியவன் - முன்னம் அவனிடம் தோல்வி கண்ட ஒரு வல்லவன்; வயிரம் உற்றுச் செல்லுமா போல் - (பழம் பகைக்குப் பழி தீர்க்கப்) பகைமை பாராட்டி மேற் சென்றாற் போல; ஆழி இந்து - சக்கர வட்டம் போன்ற சந்திரன்; அயிர் உறக் கலந்த நல் நீர் - நுண் மணல் சூழ்ந்த நல்ல நீரை உடைய; ஆழி நின்று - கடலிலிருந்து மேலெழுந்து; உயிர் தெற - இராவணன் உயிரை வருத்த; உவந்து வந்தான் ஒத்தனன் - மகிழ்வோடு வந்தவனைப் போல் விளங்கி; உதயம் செய்தான் - புலப்பட்டுத் தோன்றலுற்றான்.
முன்பு இராவணனிடம் அஞ்சி ஏவல் செய்த சந்திரன், அவன் மீது பழி தீர்க்க வந்தான் போல் உதயம் செய்தான். இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the sea of good water mingled with fine sand, the wheel-round moon,
- like a strong man once routed who, when a hostile king
- has fallen into some decline, goes against him nursing his grudge,
- rose, looking like one who had come gladly to torment a life.
What the poem says
The round moon rises out of the sea. The poet compares it to a warrior once defeated by a hostile king, who seizes the moment when that king is weakened and goes after him, eager for revenge.
The moon had long served Irāvaṇaṉ in fear; now that he is laid low by love, it seems to come up gladly to torment him. Attributing such a motive to a natural event is a recognised figure of speech.