கம்பராமாயணம் 3272 · ஆரணிய 7.123

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருந்துறை நிரம்பிய - அரிய அறிவுத் துறைகளில் வல்ல; உயிரின் அன்பரை - (தம்) உயிர் போன்ற கணவரை; பிரிந்து உறை தரும் - பிரிந்து தனித்திருக்கும்; குலப் பேதைமாரின் - குல மாதர்களைப் போன்று; விரிந்து உறை துறை தொறும் - நகரின் விரிந்த பல பகுதிகளிலும்; விளக்கம் யாவையும் - உள்ள விளக்குகள் எல்லாம்; எரிந்து இழுது அஃகல - எரிந்து நெய் வற்றவில்லையாயினும்; ஒளி இழந்தன - (சூரியன் வரவால்) தம் ஒளி குன்றின; ஏ - ஈற்றசை.

பகலின் எதிர்பாராத வரவினால் நேர்ந்த இரண்டு நிகழ்ச்சிகளை ஒன்றற்கொன்று உவமையாக மொழிந்தார். அஃகுதல் - சுருங்குதல். அஃகுதல் இல : அஃகல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In every quarter where people dwelt, all the lamps,
  2. though their ghee had not burnt away, lost their light,
  3. like noble young wives living apart
  4. from husbands dear as life, accomplished in rare arts.

What the poem says

All over the wide city, the lamps still have ghee in them, yet they lose their light because the sun has suddenly come up.

The poet compares them to high-born wives whose learned husbands, dear to them as life, have left them: their beauty fades though nothing in them has run out. Both images describe effects of the unexpected daybreak, and each is used to illustrate the other.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1virintu uṟai tuṟaitoṟum viḷakkam yāvaiyum,
erintu iḻutu aḵkala, oḷi iḻantaṉa;
arun tuṟai nirampiya uyiriṉ aṉparaip
pirintu uṟaitarum kulap pētaimāriṉē.