கம்பராமாயணம் 3273 · ஆரணிய 7.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வைகறை மலரும் மாமலர் - விடியற் காலையில் மலர வேண்டிய தாமரை போன்ற சிறந்த மலர்கள்; புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது - (அழகியதாய்க் கோலம் கொள்ளும் இதழ்கள் மலரும் உதயகாலம்; புல்லியும் - நெருங்கிய பின்னும்; வனைந்தில - மலரும் பாங்கு கொள்ளவில்லை; நனந்தலை அமளியில் - இடம் அகன்ற படுக்கையில், துயிலும் நங்கைமார் - உறக்கம் கொள்ளுகின்ற அரக்க மகளிரின்; அனந்தரின் நெடுங்கணோடு - தூக்க வசப்பட்ட நெடிய கண்களோடு, ஒத்த ஆம் - ஒத்திருந்தன. (அரோ - அசை.
காரணம் தோன்றிக் காரியம் நிகழாமை கூறுதலால் விபாவனை அணி என்பர். முன் பாடலும் இவ்வாறு அமைந்தது. அனந்தர் - தூக்கக் கலக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though the hour had come when their adorned petals should part,
- the great flowers that bloom at daybreak did not open,
- and they were like the long eyes, heavy with sleep,
- of the young women sleeping on their spacious beds.
What the poem says
The lotuses that should open at dawn stay shut, even though sunrise, the time for their petals to unfold, has arrived; the day has come too early for them.
The closed buds resemble the long eyes of the rākṣasa women still asleep in their wide beds, too drowsy to open. Describing a cause without its usual effect is a recognised figure of speech, also used in the previous verse.