கம்பராமாயணம் 3274 · ஆரணிய 7.125

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் ,
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீங்கல ,
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா
வச்சையர் நெடும் மனை வாயில் மானவே .

பொருள் · Meaning in Tamil

இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் - (அந்நகரத்தில்) விருப்பம் போல் தூங்குவோர் அனைவருடைய கண்களும்; பகலும் தம் இமைகள் நீக்கல - பகல் வந்த பின்னும் இமை விரியாதிருந்தன; நிச்சயம் - இது சத்தியம்; (இக்கண்கள்); 'பிச்சையும் இடுதும் - கேட்போருக்குப் பிச்சை இடுவோம், என்று உணர்வு பேணலா - என்னும் எண்ணம் இல்லாத, வச்சையர் - உலோபிகளின்; நெடுமனை வாயில் மான - உயர்ந்த இல்லங்களின் வாசற்கதவு போன்றிருந்தன. (அடைந்திருந்தன; ஏ - ஈற்றசை.

நெடுமனை வாயில் என்பதால் மனையின் வளம் தெரிகிறது. வளம் இருந்தாலும் பிச்சையேனும் இடுவோம் என்று நினையும் மனம் இல்லை. பெரிய கண்கள், பொழுதும் விடிந்தது; காண்பன காணும் எண்ணம் இல்லை. வாயிலைத் திறந்தால் எவரேனும் வந்து விடுவரோ என்று கருதி அடைத்த வாசல் என்பது குறிப்பு. உவமையணி, விருந்தினரையும் தக்கோரையும் தேடி வழங்கும் வள்ளன்மைதான் இல்லை; தேடி வரும் இரவலர்க்குப் பிச்சையேனும் இடலாமே என்ற எண்ணம் இல்லை என்பதைப் பிச்சையும் என்ற இழிவு சிறப்பும்மை புலப்படுத்திற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The eyes of all who slept as they pleased
  2. truly did not open their lids even in the day,
  3. like the gates of the tall mansions of misers
  4. who never think, 'Let us give at least some alms.'

What the poem says

Everyone in the city who sleeps as he likes keeps his eyes shut, though it is day. The closed eyelids are like the doors of rich misers' mansions, kept shut in case some beggar should come and ask.

The commentary draws out the comparison: the mansions are large, so wealth is there, just as the eyes are large and day has come; yet there is no will to give, just as there is no will to see. The word 'even alms' stresses that such people will not give the least thing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iccaiyil tuyilpavar yāvar kaṇkaḷum,
niccayam pakalum tam imaikaḷ nīkkala,
piccaiyum iṭutum eṉṟu uṇarvu pēṇalā
vaccaiyar neṭu maṉai vāyil māṉavē.