கம்பராமாயணம் 3275 · ஆரணிய 7.126

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாளின் நீளம் - பகல் நேரம் நீளுதலால்; ஓர் தஞ்சு உற - அதுவே தஞ்சமாக அமைய; நஞ்சுறு பிரிவின - கொடிய விடம் போலும் பிரிவுத் துன்பத்தினைப் பெற்றனவாய் விளங்கிய; நேமிப்புள் எலாம் - சக்கரவாகப் பறவைகளெல்லாம்; விடுவது ஓர் தயாவு தாங்கலால் - அத்துன்பம் நீங்கும் பகற் பொழுதின் கருணையினால்; வெஞ்சிறை நீங்கிய - பிறவியாகிய கொடிய சிறையினின்றும் விடுபட்ட; வினையினார் என - நல் வினையாளர் போல; நெஞ்சு உறக் களித்தன - மனம் நிறைந்து மகிழ்ந்தன.

இரவில் பிரிவுத் துன்பமுறும் சக்கரவாகப் புட்கள் பகலில் கூடி மகிழ்ந்தன. பிரிவு நஞ்சென உவமிக்கப் பெற்றது. நீளம் - கூடு எனவும் பொருள் கொள்ளலாம். தயாவு : தயா, தயவு, கருணை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cakravāka birds, who suffer a separation like poison,
  2. finding refuge in the length of the day, and receiving the mercy that set them free,
  3. like those of good deeds released from a cruel prison,
  4. all rejoiced with full hearts.

What the poem says

Cakravāka birds are said to be separated from their mates every night and reunited at dawn, so for them separation is like poison. The early day comes as mercy and shelter, and they rejoice with all their hearts.

The poet compares them to souls whose good deeds have freed them from the harsh prison of rebirth. One of the Tamil words can also mean 'nest', so the line may be read as the birds finding refuge in their nests.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nañcu uṟu piriviṉa nāḷiṉ nīḷam ōr
tañcu uṟa, viṭuvatu ōr tayāvu tāṅkalāl,
veñ ciṟai nīṅkiya viṉaiyiṉār eṉa
neñcu uṟak kaḷittaṉa nēmippuḷ elām.