கம்பராமாயணம் 3277 · ஆரணிய 7.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரு மணிச் சாளரம் - அரிய மாணிக்கங்கள் பதித்த சன்னலில், அதனின் ஊடு புக்கு - அங்கே உட்புகுந்து வந்து; எரிகதிர் - வெப்பம் மிக்க சூரியன்; இன்துயில் எழுப்பி எய்தவும் - தங்கள் இனிய உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வந்து சேர்ந்த பின்னும்; மங்கையர் - அரக்கர் குலப் பெண்கள்; தெருள் உற மெய்ப் பொருள் தெளிந்திலாரின் - தெளிவு தரும்படி உயர்ந்த உண்மைப் பொருளை அறியாத பேதையர் போன்று; மருளொடு - மயக்கமும்; தெருளுறும் நிலையர் - தெளிவும் கலந்த குழப்ப நிலையினராக விளங்கினர்; ஏ - ஈற்றசை.
இரவு சென்றதை நம்பமுடியாத நிலையால் ஏற்பட்ட குழப்பம், ஞானமில்லாதார் உலக வாழ்வின் உண்மையறியாத குழப்பத்தோடு ஒப்பிடப்படுகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though the burning rays came in through the windows of precious gems
- and woke them from their sweet sleep,
- the young women were in a state of half-confusion, half-clarity,
- like those who have not grasped the true reality so as to see clearly.
What the poem says
The hot sunlight streams through the jewelled windows and wakes the rākṣasa women, but they are left half asleep and half awake, unable to believe the night is already over.
Their muddle is compared to that of people who have not grasped the ultimate truth: they half understand the world, but they cannot see it clearly.