கம்பராமாயணம் 3278 · ஆரணிய 7.129

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்
நாவலர் இயற்றிய நாளின் நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணிதம் மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே .

பொருள் · Meaning in Tamil

நாவலர் இயற்றிய - புலமை நலம் சான்றோர் உருவாக்கிய; நாழி நாம நூல் - காலக் கணிதமான சோதிட நூல்களை; காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் - பாதுகாத்து ஆராய்ந்து உணர்ந்த சோதிட வல்லுநர்களும்; கூவுறு கோழியும் - விடியலைக் கூவி உணர்த்தும் சேவல்களும்; ஏவலின் வன்மையை - (இரவை விலக்கிப் பகலை வரச் சொன்ன) இராவணனின் ஆணையின் வல்லமையை; எண்ணல் தேற்றலர் - உணரும் ஆற்றல் இல்லாதவராய்; துயில்வு கொண்ட - உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். (ஏ - அசை.

இராவணன் ஆணையின் கடுமையால் காலக் கணிதமும் தோற்றது. இயற்கையை உணர்ந்த சேவல்களும் தோற்றன.

எழுவாய்க்கு ஏற்றபடி அஃறிணை முடிவு உயர்திணையாகப் பொருள் முடிவு பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to reckon the power of the command,
  2. the astronomers who had closely studied and guarded
  3. the books on the hours composed by the learned,
  4. and the cocks that crow, all fell asleep.

What the poem says

The astronomers, who carefully keep and study the learned treatises on reckoning time, and the roosters, who announce the dawn by instinct, are both caught out. Neither could have foreseen that Irāvaṇaṉ's order would end the night early.

So both the science of time and nature's own clock fail, and astronomers and cocks alike are still asleep when the sun comes up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēvaliṉ vaṉmaiyai eṇṇal tēṟṟalar
nāvalar iyaṟṟiya nāḻi nāma nūl
kāvaliṉ nuṉittu uṇar kaṇitam mākkaḷum
kūvuṟu kōḻiyum tuyilvu koṇṭavē.