கம்பராமாயணம் 3285 · ஆரணிய 7.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரும் ஒத்த வலத்து - இடியேறு போல் வலிமையோடு; உயிர் நுங்கிய திங்கள் - என் உயிரை உண்ட முழு நிலவு; ஓடித் திருமு - சென்று மறைந்து மீண்டும் வந்த; இச் சிறு மின் பிறை - இந்தச் சிறிய ஒளி வீசும் பிறை; தீமை குறைந்தது இல்லை - கொடுமையில் சிறிதும் குறைந்தது அன்று; கருமைக் கறை நெஞ்சினில் - சினக் கொடுமை மிக்க நெஞ்சு படைத்த; நஞ்சு கலந்த பாம்பின் - நச்சுத் தன்மையுடைய பாம்பினது; பெருமை - பெரிய உருவோ?; சிறுமைக்கு - சிறிய உருவம் தானே; (ஆயினும்) ஒரு பெற்றி - விடத் தன்மையில், குறைந்தது உண்டோ - சற்றும் குறைவுற்றதாகுமோ? (ஆகாது).
பாம்பு சிறியதாயினும் பெரியதாயினும் நஞ்சுடைமை மாறுபடுவதில்லை. முழு நிலவும் பிறைக் கீற்றும் கொடுமையில் அவ்வாறே அமைவன. எடுத்துக் காட்டுவமை அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- This little gleaming crescent, the moon that with thunder-like force devoured my life,
- run off and come back again, is no less in its cruelty!
- Of a serpent with poison mingled in its black-stained heart,
- whether great or small, is its nature any the less?'
What the poem says
The full moon, which struck Irāvaṇaṉ like a thunderbolt and seemed to eat up his life, has gone away and returned as a small, bright crescent. Yet it is just as cruel as before.
He compares it to a venomous snake: whether it is large or small, its poison is the same. The full moon and the crescent are equally deadly to him.