கம்பராமாயணம் 3287 · ஆரணிய 7.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆண்டு - ஆங்கு; அப்பிறை நீங்கலும் - அவ்விளம் பிறை அகன்றதும்; தீண்டற்கு எளிதாய் - தொடுதற்கு எளிதானது போலவும்; பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி - பல பொருள்களையும் தேய்க்கத் தக்க பாறை போலவும்; வேண்டின் - விரும்பினால்; கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி - வாளினால் அறுத்து வீழ்த்தலாம் தன்மை போலவும்; காண்டற்கு இனிதாய் - பார்க்க இனியது போலவும்; பல கந்து திரட்டல் ஆகி - பல தூண்களாகத் திரண்டது போலவும்; எய்தியது அந்தகாரம் - இருட்டு வந்து சேர்ந்தது.
இருளின் அடர்த்தியும் திண்மையும் உணர்த்தப் பெற்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There, as soon as the crescent left, the darkness came:
- easy to touch, like a stone on which many things could be rubbed,
- such that, if one wished, it could be sawn through and felled,
- and pleasant to look at, like something massed into many pillars.
What the poem says
The crescent leaves and darkness falls, so thick it seems solid. It feels touchable, like a whetstone on which things could be ground; one could cut it with a saw and fell it like timber; it seems gathered into great pillars.
The poet uses these images of stone, timber and columns to convey how dense and heavy the darkness is.