கம்பராமாயணம் 3288 · ஆரணிய 7.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முருடு ஈர்ந்து - (அவ்விருள்) திரட்சியான மரமென அறுக்கத் தக்கதாகி; உருட்டற்கு எளிது என்பது என் - கம்பமாய் உருட்சி செய்யத் தக்கதாய் எளிதாக அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?; பொருள் முற்றும் முற்றி - பொருள் அறிவு முழுமையாய் அடைந்து; தீங்கு இல் கேள்விச் சுடர் - குற்றமற்ற கேள்விச் செல்வமாகிய ஒளி; புக்கு வழங்கல் இன்றி - உட்புகுந்து வெளிச்சம் தராமல்; குருடு ஈங்கு இது என்ன - இவ்வுலகில் மனக் குருடே உண்மையான குருடு எனும்படி; குறிக் கொண்டு - அப் பெயருக்கு இலக்காகி; கண்ணோட்டம் குன்றி - அருள் நோக்குக் குறைந்து; அருள் தீர்ந்த - அருள் அருகிப் போன; நெஞ்சின் - மனித உள்ளத்தை விடவும்; அவ்வந்தகாரம் - அவ்விருளானது; கரிது என்பது - கருமை என்று கூறத்தக்கதாம்.
அறிவொளி சாரா உள்ளத்தை இருளுக்கு உவமித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Why say it was easy to saw like a log and turn into rounds?
- That darkness was blacker than a heart
- into which the light of faultless learning, fully mastered, has never entered to shine,
- marked out as 'here is blindness', lacking kindness, emptied of grace.
What the poem says
It goes without saying that the darkness could be sawn like a log and turned into posts. More than that, it was blacker than the heart of someone whom the light of sound learning has never reached.
Such a heart is truly blind, without compassion or grace. The poet compares the darkness to a mind with no light of knowledge, the darkest thing there is.