கம்பராமாயணம் 3289 · ஆரணிய 7.140

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1விள்ளாது செறிந்து இடை மேல் உற வீங்கி , எங்கும்
நள்ளா இருள் வந்து அகல் ஞாலம் விழுங்கலோடும் ,
' எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது
உள்ளாது , உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

விள்ளாது - துண்டு படாமல்; இடை செறிந்து - எங்கும் இடைவெளியின்றி நிறைந்து; மேல் உற ஓங்கி - விண்ணையும் வளைத்து வளர்ந்து; எங்கும் நள்ளா இருள் வந்து - எங்கும் பொருந்தாத இருள் வந்து; அகன் ஞாலம் விழுங்கலோடும் - பரந்த உலகினை மூடி மறைத்ததும்; விடம் உண்ட ஒருத்தன் - நஞ்சினை விழுங்கிய ஒப்பற்ற சிவபெருமான்; எள்ளா உலகு யாவையும் - இகழத் தக்கதல்லாத எல்லா உலகங்களையும்; யாவரும் - எல்லா மக்களையும் (பொருள்களையும்); வீவது என்பது உள்ளாது - அழிக்கும் என்று கருதாமல்; உமிழ்ந்தான் - அந்நஞ்சை உமிழ்ந்து விட்டான்; என்றான் - என்று (இராவணன்) மொழிந்தான்.

இப்பாடல் உருவக அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the hostile darkness came, unbroken, packed close, rising to touch the sky,
  2. and everywhere swallowed the wide world,
  3. he said, 'The one who drank the poison has spat it out,
  4. not caring that all the worlds, which none may scorn, and all beings would perish.'

What the poem says

The darkness spreads without a break, filling every gap and rising to the sky, and swallows the whole wide world.

Irāvaṇaṉ concludes that Śiva, who once swallowed the world-destroying poison from the ocean, must have spat it out again, careless that it would destroy every world and every being. The darkness is pictured as that poison itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḷḷātu ceṟintu iṭai mēl uṟa ōṅka, eṅkum
naḷḷā iruḷ vantu akaṉ ñālam viḻuṅkalōṭum,
' eḷḷā ulaku yāvaiyum yāvarum vīvatu eṉpatu
uḷḷātu, umiḻntāṉ viṭam uṇṭa oruttaṉ ' eṉṟāṉ.