கம்பராமாயணம் 3290 · ஆரணிய 7.141

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேலைத்தலை வந்து - திருப்பாற் கடலினின்றும் பிறந்து; ஒருவன் வலியால் விழுங்கும் - ஒப்பற்ற சிவபெருமான் தன் ஆற்றலால் உண்ட; ஆலத்தின் - ஆலகால விடம் எனும் ஒன்றில், இது - இவ்விருள்; அடங்குவதன்று - அடக்கத் தக்கதன்று; அறிந்து உணர்ந்தேன் - இதனை யான் தெளிந்து கொண்டேன்; ஞாலத்தொடு விண்முதல் யாவையும் - மண்ணையும் விண்ணையும் யாவற்றையும், நாவின் நக்கும் - தன் நாவால் தீண்டி அழிக்கும்; காலக் கனல் - ஊழிக் காலமாகிய நெருப்புப் பாம்பு; கார்விடம் உண்டு - கரிய விடத்தைத் தேக்கி; கறுத்தது அன்றே - கருமை பூண்டதை ஒக்கும் அன்றோ?

ஆலகால நஞ்சு சிவனால் விழுங்கப்பட்டுவிட்டது; இந்த இருளை விழுங்கும் சக்தி வேறு எதுவுமே இல்லை. விழுங்கப்பட முடியாத இந்த இருளாகிய நஞ்சு மண் முதல் விண் ஈறாக உள்ள அனைத்தையும் விழுங்கிவிடும். தற்குறிப்பேற்ற அணி. நாவின் நக்கும் என்றமையால் காலக் கனலாகிய பாம்பு என வருவிக்கப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. This is not something that could be contained in the poison that rose from the sea
  2. and that one god swallowed by his strength; I have come to know it well.
  3. It is the fire of the world's end, which licks up with its tongue the earth and sky and all things,
  4. grown black from swallowing dark poison, is it not?'

What the poem says

Irāvaṇaṉ corrects himself: this darkness is too great to be the poison Śiva swallowed from the ocean. It must be the fire that ends the world, pictured as a fiery serpent whose tongue licks up earth, sky and everything, which has turned black after drinking dark venom.

The poison of the ocean was contained by Śiva; nothing can contain this darkness, which threatens to swallow all creation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēlaittalai vantu oruvaṉ valiyāl viḻuṅkum
ālattiṉ aṭaṅkuvatu aṉṟu itu; aṟintu uṇarntēṉ.
ñālattoṭu viṇ mutal yāvaiyum nāviṉ nakkum
kālak kaṉal kār viṭam uṇṭu kaṟuttatu aṉṟē.