கம்பராமாயணம் 3291 · ஆரணிய 7.142

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெம்பும் தமியேன்முன் - வேதனைப்பட்டுத் தனியே வெதும்பிக் கொண்டுள்ள என் முன்னே; அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் கொம்பர் - பிறிதொன்றை ஒப்புமையாகக் கொள்ள முடியாத ஒரு பவளக் கொம்பானது; அம்பும் அனலும் நுழையா - அம்பும் நெருப்பும் ஊடுருவ முடியாததாக; கன அந்தகாரத் தும்பு மழை கொண்டு - செறிந்த இருளை வரம்பாகக் கொண்ட மேகத்தைச் சுமந்து; குரும்பைக் குலம் கொண்டது - குரும்பைத் திரளைக் கொண்டதாக; திங்கள் தாங்கி - சந்திரனைத் தாங்கிக் கொண்டு; விளக்கு என - விளக்கைப் போல; தோன்றும் - தோற்றமளிக்கிறது. (அன்று, ஏ - அசைகள்.

ஒரு பவளக் கொடி தமியேன்முன் விளக்கெனத் தோன்றும் எனக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். பவளக்கொடி ஒன்று விளக்கைப் போல் தோன்றுகின்றதாக உணர்கிறான். கரிய நிறத்துக்கு இருளையே வரம்பாகக் கொண்ட மேகம்; மேகம் சுமந்த பவளக் கொம்பு; கருங் கூந்தல் இவ்வாறு விளக்கப்படுகிறது. பவளக் கொடி ஒன்று கார்மேகத்தைச் சுமந்து, குரும்பைகள் ஏந்தி, திங்களைச் சுமந்து விளக்குப் போல் தோன்றுகிறது. கூந்தல், மார்பகம், முகம் ஆகியவற்றை மேகம், குரும்பை, திங்கள் ஆகியனவாகவும் கொடி போல் மென்மையாய் ஒளிரும் உருவத்தைப் பவளக் கொடியாகவும் கம்பர் சித்திரிக்கிறார்.

கயல் எழுதி வில் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்

(சிலம்பு - கானல்வரி 11) என்ற இளங்கோவடிகளின் கற்பனை இங்கே கருதத்தக்கது. இல் பொருளுவமைத் தன்மை கொண்ட உருவகம்; உயர்வு நவிற்சியும் கொண்டது. எதனையும் ஊடுருவும் கூர்மை கொண்ட அம்பும், எதனையும் ஊடுருவி எரிக்க வல்ல நெருப்பும் தோல்வி காணும் மேகம் என்றது கூந்தலின் செறிவையும் இருள் நிறத்தையும் சுட்டியதாகும். தும்பு - வரம்பு. மழை - மேகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In this dense darkness, which neither arrow nor fire can pierce,
  2. a branch of coral beyond compare, bearing a sky-cloud,
  3. holding a cluster of tender young coconuts and carrying a moon,
  4. appears like a lamp before me, burning here alone!

What the poem says

In the impenetrable darkness, a vision of Cītai appears to Irāvaṇaṉ. He sees it as a matchless coral branch carrying a dark cloud, a cluster of young coconuts and a moon, and it shines before him like a lamp.

The images are a riddle for her body: the coral branch is her slender glowing form, the cloud her black hair, the young coconuts her breasts and the moon her face. Hair so thick that no arrow or flame could pass through it shows how dense and dark it is. The commentary compares a line of the Cilappatikāram that asks whether a painted face is really the moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampum aṉalum nuḻaiyāk kaṉa antakārattu
umpar maḻaikoṇṭu, ayal oppu aritu āya tuppiṉ
komparkurumpaik kulam koṇṭatu, tiṅkaḷ tāṅki,
vempum tamiyēṉmuṉ, viḷakku eṉat tōṉṟum aṉṟē.