கம்பராமாயணம் 3292 · ஆரணிய 7.143

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மருள் ஊடு வந்த மயக்கோ ! மதி மற்றும் உண்டோ !
தெருளாது , இது என்னோ ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீலச்
சுருளோடும் வந்து ஒர் சுடர் மா மதி தோன்றும் அன்றே .

பொருள் · Meaning in Tamil

(மேலும் இராவணன் சிந்திக்கின்றான் மருள் ஊடு வந்த மயக்கோ - காமக் கலக்கத்தால் எனக்கு வந்த மயக்கமோ இது?; மதி மற்றும் உண்டோ - என் அறிவு வேறாய்த் திரிவுற்றதோ?; தெருளேம், இது என்னோ - தெளிவற்றேன் இவ்வுருவம்தான் யாதோ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா இருளூடு - செறிந்த அஞ்சன மை குழைத்தாலும் இணையாகாத இவ்விருட்டின் நடுவே; ஓர் சுடர் மாமதி - ஒரு காந்தி மிக்க அழகிய சந்திரன்; இரு குண்டலம் கொண்டும் - இரண்டு குண்டலங்களாகிற காதணியோடும்; இருண்ட நீலச் சுருளோடும் - கருமை கொண்ட கூந்தலோடும்; வந்து தோன்றும் - என் முன் வந்து புலனாகின்றது. (அன்றே - அசை).

இராவணன் முன் தோன்றிய உருவெளித் தோற்றம் அவனைத் தடுமாற வைத்தது. 'ஒரு சுடர் மாமதி இருளூடு குண்டலம் கொண்டும் சுருளொடும் வந்து தோன்றும்' எனக் கூட்டிப் பொருள் காண்க. இதுவும் மேலைச்செய்யுள் போன்ற உவமை சார்ந்த உருவகமாகிய உயர்வு நவிற்சியே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is this a delusion come through bewilderment? Is my mind something else now?
  2. I cannot see clearly; what is this? In a darkness that even thick kohl
  3. could not match, a bright great moon appears,
  4. wearing two earrings and with curls of dark blue hair!'

What the poem says

Irāvaṇaṉ wonders whether he is deluded by passion or whether his mind has changed. In a darkness blacker than kohl he sees a radiant moon appear, wearing two earrings and framed by dark curling hair.

The moon is Cītai's face, seen in a vision born of his longing. Like the previous verse, it is a metaphor built on a simile, with poetic exaggeration.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruḷūṭu vanta mayakkō! mati maṟṟum uṇṭō!
teruḷēm, itu eṉṉō? tiṇi mai iḻaittālum ovvā
iruḷūṭu iru kuṇṭalam koṇṭum iruṇṭa nīlac
curuḷōṭum vantu ōr cuṭar mā mati tōṉṟum aṉṟē.