கம்பராமாயணம் 3294 · ஆரணிய 7.145

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண்டே உலகு ஏழினும் உள்ள படைக் கணாரைக்
கண்டேன் ; இது போல்வது ஒர் பெண் உருக் கண்டிலேன் ஆல் ;
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்று ஏ .

பொருள் · Meaning in Tamil

பண்டு ஏய் உலகு ஏழினும் - முன்னமே ஏழு உலகங்களிலும், உள்ள படைக்கணாரைக் கண்டேன் - இருக்கும் மகளிரைப் பார்த்துள்ளேன்; இவர் போல்வதோர் பெண் உருக் கண்டிலேன் - அவர்களிடையே இவ் வடிவம் போல் ஓர் பெண் உருவை நான் கண்டதில்லை; இனி வேறு உண்டே எனின் - உலகிலுள்ள பெண்களிலிருந்து மாறுபட்டதே இவ்வுரு என்றால்; எங்கை உணர்த்தி நின்ற - என் தங்கை சூர்ப்பணகை குறித்துச் சொன்ன; வண்டு ஏறு கோதை மடவாள் - வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய இளநங்கை; இவள் ஆகும் - இவளே ஆவாள். (அன்றே - தேற்றம்; ஆல் - அசை)

படைக் கண்ணார் - அம்பு, வாள் போன்ற கண்களை உடைய பெண்கள். இதுவரை காணாத அழகு என்பதால் சூர்ப்பணகை குறிப்பிட்டது அவளேயாகும் இவள் எனக் கருதினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I have seen the weapon-eyed women in all the seven worlds
  2. that have long been mine; I have never seen a woman's form like hers;
  3. if there is now some other, it must be she, the young woman
  4. with bee-thronged hair of whom my sister told me.'

What the poem says

Irāvaṇaṉ has seen the women of all seven worlds, whose eyes are as sharp as weapons, yet he has never seen anyone like this. If she belongs to none of them, she can only be the young woman with bee-haunted hair his sister described.

He concludes that the vision before him is Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṭu ēy ulaku ēḻiṉum uḷḷa paṭaikkaṇāraik
kaṇṭēṉ; ivar pōlvatu ōr peṇ uruk kaṇṭilēṉāl;
uṇṭē eṉiṉ vēṟu iṉi eṅkai uṇartti niṉṟa
vaṇṭu ēṟu kōtai maṭavāḷ ivaḷ ākum aṉṟē.