கம்பராமாயணம் 3295 · ஆரணிய 7.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இவ்வாறு கருதிய இராவணன் மேலும் எண்ணலானான்) 'பூண்டு இப்பிணியால் - காதல் நோய் பொருந்தி அந்த நோயால், உறுகின்றது தான் பொறாதாள் - (யான் வருந்துவதை அறிந்து பொறாதவளாய்; தேண்டிக் கொடு வந்தனள் - (சீதை) என்னைத் தேற்றும் பொருட்டுத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? - யான் இவளுக்குச் செய்யத்தக்க கைம்மாறு ஏதும் உண்டா? (இல்லை); காண்டற்கு இனியாள் - கண்டு களிக்க இனியவளான சீதையினது; உருக் கண்டவள் - வடிவத்தை நேரிற்கண்ட சூர்ப்பணகையை, கேட்கும் ஆற்றால் - வினவி உண்மை அறியும் பொருட்டு; ஈண்டு இப்பொழுதே - இதோ இந்தக் கணமே; விரைந்து - விரைவாக, எங்கையைக் கூவுக' என்றான் - என் தங்கையை அழையுங்கள் என்று ஆணையிட்டான்.
உருவெளித் தோற்றத்தைச் சீதையென மயங்கியவன் உண்மை அறியத் தங்கையை அழைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Unable to bear what I suffer, caught in this sickness,
- she has sought me out and come; is there any return I could make?
- So that I may ask the one who saw the form of her who is sweet to behold,
- call my sister here at once, and quickly!' he said.
What the poem says
Irāvaṇaṉ convinces himself that Cītai, unable to bear his suffering, has come looking for him to comfort him, and he wonders how he could ever repay her.
To be sure, he wants to ask the only person who has actually seen Cītai. He orders his servants to fetch his sister at once.