கம்பராமாயணம் 3296 · ஆரணிய 7.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றான் எனலும் - இவ்வாறு இராவணன் கட்டளையிட்டான் என்றதும்; (பணியாளர்); கடிது ஏகினர் கூவும் எல்லை - விரைந்து சென்று (சூர்ப்பணகையை) அழைத்த பொழுதில்; வன்தாள் நிருதக் குலம் - வலிய முயற்சியை உடைய அரக்கர் மரபை; வேர் அற மாய்த்தல் செய்வாள் - ஆணி வேரோடு அழிக்கப் பிறந்த அவள்; நாசி - மூக்கையும்; பொன்தாழ் குழை தன்னொடும் - பொன்னாலாகிய குழையணிந்த செவியையும்; போக்கினள் - பறி கொடுத்தவள்; ஒன்றாத காமக் கனல் - ஒரு தலையாய்ப் பிறந்த காம நெருப்பு; உள் தெறலோடும் - மனத்தை வருத்தும் நிலையில், போய்ப் புகுந்தாள் - அங்கு வந்து சேர்ந்தாள்.
சேர்ந்தாரை அழிக்கும் நெருப்புப் போன்றது காமமென்பதால் காமக்கனல் என்றார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He said this; and when they had gone quickly and called her,
- she who was to destroy the clan of strong-footed rākṣasas root and all,
- she who had lost her nose together with her ears hung with gold,
- came in, with the fire of unrequited lust scorching her within.
What the poem says
The servants hurry off and bring Cūrppaṇakai. The poet reminds us who she is: the woman who will cause the rākṣasa race to be destroyed root and branch, who has lost her nose and her gold-adorned ears.
She arrives still burning inside with one-sided desire for Irāmaṉ. Lust is called a fire because it destroys whoever it touches.