கம்பராமாயணம் 3297 · ஆரணிய 7.148

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி ,
நெய் நின்ற கூர் வாளவன் , நேர் உற நோக்கு நங்காய் !
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர்
இந்நின்றவள் ஆம் கொல் இயம்பிய சீதை ? என்றான் .

பொருள் · Meaning in Tamil

நெய் நின்ற கூர் வாளவன் - நறு நெய் பூசிய கூரிய வாளை உடைய இராவணன்; பொய்ந்நின்ற நெஞ்சின் - பொய் குலவும் மனம் உடைய; கொடியாள் புகுந்தாளை நோக்கி - கொடிய சூர்ப்பணகை அங்கு வரவும், அவளைப் பார்த்து; நங்காய் - பெண்ணே!; நேர் உற நோக்கு - நன்றாக உற்றுப்பார்; மை நின்ற வாள் கண் - அஞ்சன மை பூசிய ஒளி மிக்க கண்களோடு; மயில் நின்றென வந்து - ஒரு தோகை மயிலென முன் வந்து; என் முன்னர் - எனக்கு எதிரில்; இந்நின்றவள் ஆம் கொல் - இதோ நிற்கும் இவளே போலும்; இயம்பிய சீதை - நீ குறிப்பிட்ட சீதை; என்றான் - என்று வினவினான்.

இராவணன் மனத்தைக் காமம் கவ்விய நிலையில் உருவெளித் தோற்றத்தை மெய்யாக நம்பி இங்ஙனம் தங்கையிடம் கேட்டான். அவளும் அதே நிலையினள் என்பதை வரும் பாடல் உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the wicked woman with a heart full of lies as she came in,
  2. he of the sharp, oiled sword said, 'Look closely, lady!
  3. She who has come and stands before me like a peahen, with bright eyes lined with kohl,
  4. this one standing here, is she the Cītai you spoke of?'

What the poem says

When the deceitful Cūrppaṇakai enters, Irāvaṇaṉ, with his oiled and sharpened sword, asks her to look carefully. A woman with kohl-lined eyes stands before him like a peahen. Is this the Cītai she described?

Gripped by desire, he takes the vision for a real woman. The next verse shows that his sister is in the same state.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poy niṉṟa neñciṉ koṭiyāḷ pukuntāḷai nōkki,
ney niṉṟa kūr vāḷavaṉ, nēr uṟa nōkku naṅkāy!
mai niṉṟa vāḷ kaṇ mayil niṉṟeṉa vantu eṉ muṉṉar
inniṉṟavaḷ āmkol iyampiya cītai? eṉṟāṉ.