கம்பராமாயணம் 3298 · ஆரணிய 7.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செந்தாமரைக் கண்ணொடும் - சிவந்த தாமரை மலர் போன்ற கண்களோடும்; செங்கனி வாயினோடும் - கோவைக் கனி போன்ற இதழ்களோடும்; சந்து ஆர் தடந் தோளொடும் - சந்தனம் பொருந்திய உயர்ந்த தோள்களோடும்; தாழ் தடக்கைகளோடும் - நீண்ட பெரிய கரங்களோடும்; அம் தார் அகலத்தொடும் - அழகிய மாலை புனைந்த மார்பினோடும்; அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் - நீல மலை போல வந்து தோன்றும்; இவன் - இவ்வுரு உடையவனே; அவ் வல் வில் இராமன் ஆகும் - அவ்வீர வில்லேந்திய இராமன் ஆவான்; என்றாள் - என்று சூர்ப்பணகை மொழிந்தாள்.
உருவெளித் தோற்றத்தை நேர் மாறாகக் காம வசப்பட்ட சூர்ப்பணகை இராமன் என்றாள்.
இந்த வேடிக்கையான உள்ளத்தின் விளையாட்டைக் கம்பர் மனவெளி நாடகமாக்கி மகிழ்விக்கின்றார். கம்ப நாடகம் என அறிஞர் இத்தகு காட்சிகளை வியப்பர். வேதம் முதலிய நூலுணர்வும் தவமேம்பாடும் வரங்கொண்ட மேன்மையும், வெற்றிக் கொற்றமும் மற்றும் பல சிறப்புக்களையும் கொண்ட இராவணன் காமத்தால் சிறுமையுற்று எள்ளப்படும் நிலை அடைகிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With eyes like red lotuses, with lips like red fruit,
- with broad shoulders smeared with sandal, with long great arms,
- with a lovely garlanded chest, like a mountain of collyrium,
- this one has come; he must be that Irāmaṉ of the mighty bow,' she said.
What the poem says
Cūrppaṇakai looks at the phantom and sees exactly the opposite of what her brother sees. To her it is a man with eyes like red lotuses, lips like ripe red fruit, broad sandal-smeared shoulders, long arms and a garlanded chest, dark as a mountain of kohl: the great archer Irāmaṉ.
The poet turns the two lovers' delusions into comedy. Irāvaṇaṉ, for all his learning, penance, boons and victories, is made ridiculous by lust.