கம்பராமாயணம் 3299 · ஆரணிய 7.150
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நான் கண்டது இது - நான் பார்த்த இவ்வடிவம்; பெண்பால் உரு - பெண் வடிவமாகும்; பேதை - அறியாமை உடையவளே; நீ ஈண்டு - நீயோ இங்கு, எண்பாலும் இலாதது ஓர் - எண்ணத்தில் எங்கும் கருதப்படாத ஒரு; ஆண் உரு என்றி - ஆண் வடிவம் என்று கூறுகின்றாய்; என்னே - இது வியப்பாய் இருந்தது; கண்பால் உறும் மாயை - கண்கள் நம்பும்படியான மாயச் செய்கை; கவற்றுதல் கற்ற நம்மை - மயங்கும்படி செய்யவல்ல வித்தையாய்ப் பயின்ற நமக்கு; மண்பால் - இவ்வுலகில்; மாயை விளைப்பவர் எவரே கொல் - மாயை செய்தவர் யாராக இருக்கலாம்; என்றான் - என ஐயுற்று (இராவணன்) மொழிந்தான்.
மாயையில் வல்ல நம்மையும் ஏமாற்றும் மாயை உண்டோ என்றான். ஒருவர் பெண் என்ன, இன்னொருவர் ஆண் என்ன விளைந்த மயக்கத்தை இவ்வாறு குறித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What I saw here is a woman's form; foolish girl, you
- say it is a man's form, which is nowhere at all to be thought of here; how strange!
- We who have learned how to trouble men with illusions that work upon the eye,
- who on earth could work illusion upon us?' he said.
What the poem says
Irāvaṇaṉ is puzzled. He sees a woman, yet his sister insists it is a man, which makes no sense to him.
The rākṣasas are masters of illusion who know how to deceive the eyes of others. Who in the world, he asks, could be working an illusion on them? He cannot see that the illusion comes from inside them both.