கம்பராமாயணம் 3301 · ஆரணிய 7.152

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னாள் அது கூற , அரக்கனும் ,' அன்னது ஆக ;
நின்னால் அவ் இராமனைக் காண்குறும் நீர் என் ? ' என்றான் ;
' எந்நாள் அவன் என்னை இத் தீர்வு அரும் இன்னல் செய்தான் ,
அ நாள் முதல் யானும் அயர்த்திலன் ஆகும் ' என்றாள் .

பொருள் · Meaning in Tamil

அன்னாள் அது கூற - சூர்ப்பணகை இவ்வாறு கூறவும்; அரக்கனும் - இராவணனும்; அன்னது ஆக - நீ கூறியதே உண்மை ஆகுக, (எனில்) நின்னால் அவ் இராமனை - உன் கண்களில் அவ்விராமனை; காண்குறும் நீர் என்? - காணுகின்ற தன்மை நேர்ந்தது எவ்வாறு?; என்றான் - என்று கேட்டான் (அதற்கு அவள்); எந்நாள் அவன் என்னை - எப்பொழுது அவ்விராமன் எனக்கு; இத்தீர்வு அரும் இன்னல் செய்தான் - இவ்வாறு விலக்கலாகாத் தீமை செய்தானோ; அந்நாள் முதல் - அப்பொழுதுமுதலாக; யானும் அயர்த்திலென் ஆகும் - நானும் அவனை மறக்கவில்லை; என்றாள் - என்று பதிலிறுத்தாள்.

சீதையைத் தான் கண்டது ஆசையின் உரு வெளிப்பாடு என்றால் சூர்ப்பணகை கண்ணில் இராமன் தோன்றியது ஏன் என்ற ஐயம் இராவணனுக்கு எழுந்தது. சூர்ப்பணகை தன் காமத்தை ஒளித்து, அவனை நினைத்தற்குக் காரணம் அவன் செய்த கொடுமை எனத் தந்திரமாய் மொழிந்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she said that, the rākṣasa said, 'So be it;
  2. but how is it that you see that Irāmaṉ?'
  3. 'Ever since the day he did me this harm that can never be undone,
  4. from that day I too have not forgotten him,' she said.

What the poem says

Irāvaṇaṉ accepts her explanation, but it raises a question: if desire makes him see Cītai, why does she see Irāmaṉ?

Cūrppaṇakai covers up her own passion with a clever answer. Since the day Irāmaṉ did her this irreparable harm, she says, she has not been able to forget him, implying that it is hatred, not love, that keeps him in her mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉāḷ atu kūṟa, arakkaṉum,' aṉṉatu āka;
niṉṉāl av irāmaṉaik kāṇkuṟum nīr eṉ? ' eṉṟāṉ;
' ennāḷ avaṉ eṉṉai it tīrvu arum iṉṉal ceytāṉ,
an nāḷmutal yāṉum ayarttileṉ ākum ' eṉṟāḷ.