கம்பராமாயணம் 3304 · ஆரணிய 7.155

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'' '
பாட வேறுபாடு · Project Madurai reads
1இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் ,
மறந்தான் உணர்ந்தான் , அவண் மாடு நின்றாரை நோக்கிக்
'''கறந்தால் என நீர்தரு சந்திரகாந்தத்தாலே
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க '' எனச் செப்புக ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

இறந்தார் பிறந்தார் என - மரணமுற்றவன் மீண்டும் பிறந்தான் எனும்படியாய்; இன் உயிர் பெற்ற மன்னன் - தன் இனிய உயிரைப் பெற்ற இராவணன்; மறம் தான் உணர்ந்தான் - தன் வலிமையை உணர்ந்து கொண்டவனாய்; அவண் மாடு நின்றாரை நோக்கி - அங்குப் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து; கறந்தால் என - பால் கறந்தால் சுரப்பதுபோன்று; நீர்தரு சந்திர காந்தத்தாலே - நீர் சுரப்பதாகிய சந்திர காந்தம் என்னும் கற்களாலே; சிறந்து ஆர் மணிமண்டபம் - சிறந்து விளங்கும் எழில் மிகு மணி மண்டபம் ஒன்றை; செய்க என - சமைக்க வேண்டும் என; செப்புக என்றான் - சிற்பக் கலைஞரிடம் கூறுங்கள் எனப் பணித்தான்.

சந்திரகாந்தம் - சந்திர கிரணம் பட்டதும் நீர் சொரியும் ஒரு வகைக்கல். சந்திர காந்தக் கல்லாலாகிய கட்டடம் பற்றி முன்னும் (122) கம்பர் குறித்திருக்கிறார். குளிர்ச்சியை நாடி இவ்வாறு கூறினான். செப்புக என்றது தெய்வச் சிற்பியைக் கருதிக் கூறியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king, recovering his sweet life as if the dead were born again,
  2. came to his strength, and, looking at those who stood near him there,
  3. said, 'Tell them: "Build a splendid jewelled pavilion
  4. of moonstone, which gives water as if it were milked."'

What the poem says

Irāvaṇaṉ comes round as if a dead man had been born again, and recovers his strength. Seeking coolness, he tells his attendants to pass on an order: a magnificent jewelled pavilion is to be built of moonstone.

Moonstone, candrakānta, was believed to ooze water when the moon's rays fell on it, as a cow gives milk. 'Tell them' refers to the divine architect who is summoned in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟantār piṟantār eṉa iṉ uyir peṟṟa maṉṉaṉ,
maṟam tāṉ uṇarntāṉ, avaṇ māṭu niṉṟārai nōkkik
'''kaṟantāl eṉa nīr taru cantirakāntattālē
ciṟantu ār maṇi maṇṭapam ceyka '' eṉac ceppuka ' eṉṟāṉ.