கம்பராமாயணம் 3305 · ஆரணிய 7.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடுவான் உறை தச்சன் - உயர்ந்த தேவருலகத் தச்சனான விசுவகர்மா; மனத்து உணர்ந்தான் - இராவணன் கட்டளையைத் தன் மனதில் உணர்ந்து கொண்டவனாய், வந்தான் - அங்கு வந்து சேர்ந்தான்; அம் தாம நெடுந்தறி ஆயிரத்தால் - அழகிய ஒளி மிக்க ஆயிரம் நெடுந்தூண்களால்; அமைந்த சந்தார் மணிமண்டபம் - அமைவதான அழகு பொலியும் சந்திர காந்த மணி மண்டபத்தை, தாமரையோனும் நாண - படைப்புக் கடவுளாகிய பிரமனும் வெட்கப்படும்படியாக; சிந்தா வினை அன்றியும் - சிந்தித்து உருவாக்கிய தோடன்றி; கைவினையாலும் செய்தான் - கைவினைத் திறன் மிளிரவும் செய்து முடித்தான்.
சந்து - அழகு. நினைவினாலும் திட்டமிட்ட செயலாலும் எழில் கூட்டி மண்டபம் அமைத்தான் விசுவகர்மா. வெற்றி பெறுதற்குத் திட்டமும் வேண்டும்; வினை செயல் வகையும் வேண்டும். இதை இச் செய்யுள் உணர்த்தியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The carpenter who dwells in the high heaven, knowing it in his mind, came,
- and not only by the work of thought but also by the work of his hands he built,
- on a thousand tall pillars with lovely garlands,
- a beautiful jewelled pavilion, so that even the Lotus-born was put to shame.
What the poem says
Viśvakarmā, the architect of the gods, senses the king's command in his mind and arrives at once. He builds a lovely jewelled pavilion standing on a thousand tall, gleaming pillars, so fine that even Brahmā the creator is put to shame.
He works first in thought, planning the design, and then with his hands. The commentary draws a lesson: any success needs both careful planning and skilled execution.