கம்பராமாயணம் 3307 · ஆரணிய 7.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆணிக்கு அமை பொன் கை - ஆணிப் பொன் அணிகலன்கள் அணிந்த கரத்தில்; மணிச் சுடர் ஆர் விளக்கம் - ஒளிச் சுடர் பொருந்திய விளக்குகளை ஏந்து; பூணின் பொலிவார் - நகைகளை அழகுற அணிந்தவரான; அத் தெய்வ மடந்தை மார்கள் - அந்தத் தேவமங்கையர்; புடை ஏந்திட - இருபுறமும் எடுத்து வர; சேண் உற்ற இருள் சீப்ப - வான்முழுதும் செறிந்த இருள் சிதறி ஓட; பொங்கு தோளான் - விம்மிய (இருபது) தோள்களை உடைய இராவணன்; மாணிக்க மானத்திடை - ஒரு மாணிக்க விமானம் ஏறி; மண்டபம் காண வந்தான் - அம்மணி மண்டபம் காண வருகை தந்தான்.
தேவ மகளிர் மணி விளக்கெடுப்ப, இராவணன் மாணிக்க விமானத்தில் மணி மண்டபம் காண வந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While those divine maidens, radiant with ornaments, carried at his sides
- lamps blazing with gems in hands of fine gold
- to drive away the darkness that filled the sky,
- he of the swelling shoulders came in a ruby car to see the pavilion.
What the poem says
Irāvaṇaṉ, with his mighty shoulders, rides in a ruby-studded aerial car to see the new pavilion. Heavenly maidens adorned with jewels walk on either side, holding gem-lit lamps in their golden hands.
Their lamps scatter the thick darkness that he had ordered to fill the sky.