கம்பராமாயணம் 3309 · ஆரணிய 7.160
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொற்பு உற்றன ஆம் - அழகு பொருந்தியனவாய்; கற்பத் தருவின் பூவில் நின்ற - கற்பக மரத்தின் பூக்களாய்ப் பொருந்திய; மணி ஒன்பதும் - நவரத்தினங்களும்; கதிர் நாள் நிழல் கற்றை நாற - கதிரவனின் பகற்கால ஒளிக்கிரணங்கள் போல் தோன்ற; அல் பற்று அழிய - இருளின் பிடிப்புச் சிதையும்படி; பகல் ஆக்கியது - பகற் பொழுதை உருவாக்கியது; அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது - சூரியன் மறைந்து நிற்கவும் ஒளியானது வீசிக் கொண்டிருப்பது; நீள் சுடர் மேன்மை அன்றோ - கற்பக மரங்களிலிருந்து பெருகும் ஒளியின் சிறப்பு அல்லவா?
கற்பக மரங்களின் பூக்கள் தரும் ஒளியை வியந்தவாறாம். கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம் என்பன நவமணிகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The nine great gems, full of beauty, standing as flowers
- on the wish-granting trees, gave off clustered rays like the light of day,
- and so destroyed the grip of the night and made it day; that it shines
- while the sun stays away, is that not the excellence of their long light?
What the poem says
The flowers of the kaṟpaka trees in the grove are the nine precious gems, and they shine like sunlight. Their glow breaks the hold of the darkness and turns night into day.
The poet marvels that such brilliance can shine while the sun itself is absent. The nine gems are listed as gōmēdaka, sapphire, coral, topaz, emerald, pearl, ruby, diamond and cat's-eye.