கம்பராமாயணம் 3310 · ஆரணிய 7.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊறு - தொடுதல், ஓசை - கேட்டல்; முதற் பொறி யாவையும் - முதலான உணர்வு தரும் ஐம் பொறிகளும்; ஒன்றின் ஒன்று தேறா நிலை - ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து உணர முடியாத நிலையினை; உற்றதோர் சிந்தையன் - அடைந்த குழப்ப மனம் படைத்தவன்; செய்கை ஓரான் - இன்னது செய்வதென விளங்காத இராவணன்; வேட்கை விசித்தது ஈர்ப்ப - ஆசை பற்றி இழுத்து வர; வேறு ஆய பிறப்பிடை - மற்றொரு பிறவி எடுத்து (அப்பிறப்பில்; மாறு ஓர் உடல் புக்கென - இன்னொரு உடல் கொண்டு வந்தவன் போல்; மண்டபம் வந்து புக்கான் - சந்திர காந்த மண்டபம் அடைந்தான்.
ஐம்பொறி உணர்வுகளும் நிலைகுலைந்தமையால் ஆற்றல் மிக்க இராவணன் வேறொரு பிறவி எடுத்தவன் போல் வலிமையிழந்து காட்சி தந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a mind in which touch, sound and all the senses
- could no longer be told one from another, not knowing what to do,
- as desire bound him and dragged him on, like one who in another birth
- had entered a different body, he came and entered the pavilion.
What the poem says
Irāvaṇaṉ's senses are so confused that he can no longer tell touch from sound or one sense from another, and he has no idea what to do.
Dragged along by desire, he enters the moonstone pavilion looking like a different person, as if he had been reborn in a weaker body. The mighty king has become a stranger to himself.