கம்பராமாயணம் 3311 · ஆரணிய 7.162

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தண்டல் இல் தவம் செய்வோர்தாம் வேண்டின தாயின் நல்கும்
மண்டல மகர வேலை , அமுதொடும் வந்தது என்னப்
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பசுமை பொன்
தண் தளிர் மலரில் செய்த சீதளச் சேக்கை சார்ந்தான் .

பொருள் · Meaning in Tamil

தண்டல் இல் தவம் செய்வோர் - விருப்பம் அழித்துத் தவம் புரிந்த தேவர்கள்; தாம் வேண்டிய தாயின் நல்கும் - எதனை விரும்பினாலும் தாயைப் போல் வழங்குகின்ற; மண்டல மகர வேலை - மகர மீன்கள் உலாவும் வட்ட வடிவமான பாற்கடல்; அமுதொடும் வந்தது என்ன - அமுத கலசத்தோடு வந்தாற்போல; பண்தரு சுரும்பு சேரும் - இசை பாடும் வண்டுகள் மொய்க்கும்; பசுமரம் உயிர்த்த - பச்சை மரங்களில் பிறந்த; பைம்பொன் தண்டளிர் - பொன்னிற இளந் தளிர்களாலும்; மலரின் செய்த - மலர்களாலும் சமைத்த; சீதளச் சேக்கை - குளிர்ச்சியான படுக்கை அமைந்திருக்க; சார்ந்தான் - (அதனை இராவணன் அடைந்தான்.

அமுதப் பாற்கடல் போன்றிருந்த பூந்தளிர்ப் படுக்கை, தவம் பலனை எதிர் நோக்காது செய்யப்படுவது. ஆயினும் எதனையும் தரவல்லது. இதனைத் 'தண்டல் இல் தவம் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the round sea full of makara fish, which, like a mother, gives
  2. whatever is wished to those who do unfailing penance, come bearing its nectar,
  3. he went to a cool bed made of cool golden shoots and flowers
  4. that the green trees had put forth, where humming bees gathered.

What the poem says

Irāvaṇaṉ lies down on a cool bed made of golden young leaves and flowers from the living trees, with bees humming around it.

The bed is compared to the round ocean of milk, full of makara fish, rising up with its nectar: like a mother, that ocean gives whatever is asked to those who perform penance without seeking a reward. The bed seems to promise him the same relief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇṭal il tavam ceyvōr tām vēṇṭiya tāyiṉ nalkum
maṇṭala makara vēlai, amutoṭum vantateṉṉa
paṇ taru curumpu cērum pacu maram uyirtta paim poṉ
taṇ taḷir malariṉ ceyta cītaḷac cēkkai cārntāṉ.