கம்பராமாயணம் 3312 · ஆரணிய 7.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நேரிழை மகளிர் கூந்தல் - நல்ல அணிகலன்கள் அணிந்த பெண்களின் கூந்தலில்; நிறை நறை வாசம் நீந்தி - நிறைந்த (மலர்களின்) தேனும் மணமும் தோய்ந்து; வேரி அம் சரளச் சோலை - நறுமணம் நிரம்பிய அழகிய இனிய சோலைகளில்; வேனிலான் விருந்து செய்ய - மன்மதனுக்கு விருந்து வைக்கும் முகத்தான்; ஆர்கலி அழுவம் தந்த அமிழ்தென - ஓசைமிக்க கடல் உவந்தளித்த அமுதம் போன்றதும்; ஒருவர் ஆவி தீரினும் - ஒருவர் உயிர் போகும் பொழுதிலும்; உதவற்கு ஒத்த - அதனை மீட்டுத் தர வல்லதான; தென்றல் - தென்றற் காற்று; வந்து இறுத்தது - அங்கு வந்து சேர்ந்தது. (அன்றே - அசை.
உயிர் போகும் போதும் மீட்டுத் தரும் இனிய தென்றல் இங்கு இராவணன் உயிரைப் பறிப்பது போல் வந்தது தோன்ற இவ்வாறு கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swimming through the rich fragrance of honey in the hair of women with fine jewels,
- to make a feast for the lord of spring in the lovely fragrant groves of pine,
- like the nectar the roaring sea gave, fit to save a man
- even when his life is leaving him, the south wind came and settled there.
What the poem says
The southern breeze arrives, laden with the honeyed scent of flowers in the hair of jewelled women. It wafts through the fragrant groves as if serving a feast to Kāma, lord of spring.
This breeze is like the nectar that rose from the ocean, able to bring a man back even as his life is slipping away. The poet's irony is that it comes here not to save Irāvaṇaṉ but almost to take his life.