கம்பராமாயணம் 3313 · ஆரணிய 7.164
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீள் அரத்தங்கள் சிந்தி - நெடிய இரத்தத் துளிகள் சிந்தி; நெருப்பு உக - தீப்பொறிகளும் கக்கும்படி; நோக்கும் நீரான் - சினமுடன் பார்க்கும் கண்கள் கொண்ட இராவணன்; சாளரத்தூடு வந்து தவழ்தலும் - (தென்றல்) பலகணி வழியே வந்து பாயவும், தரித்தல் தேற்றான் - பொறுக்க இயலாதவனாய் ஆனான்; வாழ்மனை ஆண்டு - வாழும் இல்லத்தின்கண்; ஓர் மாசுணம் புகுந்தது வரக் கண்டன்ன - ஒரு மலைப் பாம்பு நுழைந்து வரக் கண்டது போல்; கோள் உறக் கொதித்து - துன்பம் கொண்டு சினமுற்று; விம்மி - கலங்கி; உழையரைக் கூவிச் சொன்னான் - பணியாளரைக் கூப்பிட்டுப் பின் வருமாறு கூறினான்.
மலையினின்று வரும் மலய மாருதமான தென்றலை மலைப் பாம்பாகக் குறிப்பிட்டார். தென்றல் என்றதற்கேற்ப அதன் அசைவினைத் தவழ்தல் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as it came creeping in through the windows, he could not bear it;
- he whose eyes, as he glared, shed long streams of blood and spilled fire,
- like one who sees a great python come into the house where he lives,
- seethed in anguish, sobbed, and calling his attendants, spoke.
What the poem says
As the breeze creeps in through the windows, Irāvaṇaṉ cannot bear it. His eyes, glaring, seem to drip blood and shoot sparks.
He reacts as a man would on seeing a python slither into his home. Burning with pain and rage, he calls his servants. The breeze comes from the Malaya hills, so the poet pictures it as a mountain snake, and its gentle movement as creeping.