கம்பராமாயணம் 3314 · ஆரணிய 7.165
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூவலின் உயிர்த்த சில் நீர் - கிணற்றில் தோன்றிய சிறிதளவு தண்ணீர்; உலகினைக் குப்புற்றென்ன - உலகத்தை மூழ்கடித்தது என்றாற் போல; தேவரில் ஒருவன் - (எனக்கு ஆட்பட்ட) தேவரில் ஒருவனாகிய வாயு; என்னை இன்னலும் செயத் தக்கானோ - எனக்கே தீமையும் செய்ய வல்லவன் ஆகிவிட்டானோ; ஏவலின் அன்றி - என் கட்டளையின்றி; தென்றல் எவ்வழி எய்திற்று - எவ்வாறு தென்றல் இங்கு வந்தது; என்னா - என்று (இராவணன்) வினவி; காவலின் உழையர் தம்மை - காவல் பணியாளர்களை; கடிதின் கொணருதிர் - விரைவாக அழையுங்கள்; என்றான் - எனக் கூறினான்.
கிணற்று நீர் உலகை மூழ்கடித்தாற் போல ஒரு தேவன் எனக்கு இன்னல் செய்தான் என்று ஏளனமாய் உரைத்தான் இராவணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As if the little water that springs up in a well were to drown the world,
- is one of the gods now able even to do me harm?
- Without my command, by what way did the south wind get in?' he said,
- and, 'Bring the guards on watch here, quickly!'
What the poem says
Irāvaṇaṉ is outraged. For one of the gods, Vāyu, lord of the wind, who is his servant, to harm him is as absurd as a little well water flooding the whole world.
He demands to know how the breeze got in without his permission, and orders the guards brought before him at once.