கம்பராமாயணம் 3316 · ஆரணிய 7.167

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1' வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வெருவார் என்றால் ,
மாண்டது போலும் கொள்கை , யான் உடை வன்மை ; வல்லைத்
தேண்டினீர் , திசைகள் தோறும் சேண் உற விசையின் செல்குற்று ,
ஈண்டு இவன் தன்னைப் பற்றி இரும் சிறை இடுதிர் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

வேண்டிய நினைந்து செய்வான் - தாங்கள் விரும்பியவாறு எண்ணிச் செயல்பட; விண்ணவர் வருவது என்றால் - தேவர்கள் வருவார்கள் என்றால்; யானுடை வன்மைக் கொள்கை - என்னுடைய ஆற்றற் கோட்பாடு; மாண்டது போலும் - அழிந்து போனது போலும், வல்லைத் தேண்டி - விரைவாக எங்கும் தேடி; திசைகள் தோறும் - எட்டுத்திசைகளிலும்; சேணுற விசையில் செல்குற்று - தொலை தூரங்களிலும் வேகமாய்ச் சென்று; இவன் தன்னைப் பற்றி - வாயு தேவனைப் பிடித்து; நீர் - நீங்கள்; ஈண்டு இருஞ்சிறை இடுதிர் - இங்கே பெருஞ்சிறைச் சாலையில் தள்ளுமின்; என்றான் - என்று இராவணன் மொழிந்தான்.

காற்றைப் பிடித்துக் கடுஞ்சிறையில் இட இராவணன் ஆணையிட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If the gods can come here to do whatever they think fit,
  2. then my power and my rule, it seems, are dead; quickly
  3. search, go swiftly into every quarter, far and wide,
  4. seize this one, and throw him into a great prison here!' he said.

What the poem says

If the gods can now come and go and do as they please, Irāvaṇaṉ says, his power and authority must be finished. He orders his men to search every direction at speed, catch the wind god and lock him in a dungeon here in Ilaṅkai.

The order to imprison the wind shows both the scale of his power and how far lust has unsettled his judgement.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' vēṇṭiya niṉaintu ceyvāṉ viṇṇavar varuvatu eṉṟāl,
māṇṭatu pōlum koḷkai, yāṉuṭai vaṉmai; vallait
tēṇṭi nīr, ticaikaḷtōṟum cēṇuṟa vicaiyil celkuṟṟu,
īṇṭu ivaṉ taṉṉaip paṟṟi iruñciṟai iṭutir ' eṉṟāṉ.