கம்பராமாயணம் 3319 · ஆரணிய 7.170

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்த மந்திரியரோடு மாசு அற மனத்தின் எண்ணிச்
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் , தெளிவு இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் , ஆரும் இன்றி ,
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் .

பொருள் · Meaning in Tamil

வந்த மந்திரிகளோடு - அங்கு வந்து சேர்ந்த அமைச்சர்களுடன்; மாசு அற மனத்தின் எண்ணி - குற்றம் குறைகள் இன்றி ஆலோசனை செய்தபின்; தெளிவு இல் நெஞ்சன் - தெளிவு பிறக்காத நெஞ்சம் உடையவனாய்; சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் - (இறுதியில் தான்) மனத்தில் கருதியதையே செய்யும் தன்மையுடையவனாய் விளங்கும் இராவணன்; ஆரும் இன்றி - எவர் துணையும் இல்லாமல்; அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் - விண்ணில் செல்லும் ஒரு விமானத்தில் ஏறி; இந்தியம் அடக்கி நின்ற - புலன்களை அடக்கித் தவம் செய்கின்ற, மாரீசன் இருக்கை சேர்ந்தான் - மாரீசன் என்பானது இருப்பிடத்தை அடைந்தான்.

அமைச்சரோடு ஆலோசித்த போதிலும் தான் நினைத்ததையே செய்வது இராவணன் இயல்பு. அதனால் அமைச்சரின் நற் கருத்துக்களை அவன் ஏற்கவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். மாரீசன் இராவணனுக்குத் தாய் வழி மாமன் ஆவான் (3240) விசுவாமித்திரர் செய்த வேள்வியைக் காக்கச் சென்ற இராமபிரானது கணைக்குத் தப்பி ஓடிப் பிழைத்தவன் இவன். இராமபாண தீட்சையால் பழி நெறி மாறித் தவநெறி மேற்கொண்டவன் இவன். ஆதலால், 'இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having deliberated with the ministers who came, weighing it in his mind without fault,
  2. he whose way is to do what he has already thought in his heart, with no clarity of mind,
  3. in a vimāṉam that travels through the sky, with no one at all,
  4. went to the dwelling of Mārīcaṉ, who had mastered his senses.

What the poem says

Irāvaṇaṉ consults his ministers carefully, but as always he ends up doing only what he had already decided, and his mind is still clouded. Alone, he boards an aerial car and flies to the hermitage of Mārīcaṉ.

Mārīcaṉ, his uncle on his mother's side, once barely escaped Irāmaṉ's arrow when Irāmaṉ guarded Vicuvāmittiraṉ's sacrifice. Changed by that experience, he gave up his evil ways and now lives as an ascetic who has mastered his senses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vanta mantirikaḷōṭu mācu aṟa maṉattiṉ eṇṇi
cintaiyil niṉainta ceyyum ceykaiyaṉ, teḷivu il neñcaṉ
antaram celvatu āṇṭu ōr vimāṉattil, ārum iṉṟi,
intiyam aṭakki niṉṟa mārīcaṉ irukkai cērntāṉ.