கம்பராமாயணம் 3320 · ஆரணிய 7.171

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இருந்த மாரீசன் , வந்து அவ் இராவணன் எய்தலோடும் ,
பொருந்திய பயத்தன் , சிந்தை பொருமுற்று , வெருவுகின்றான் ,
கருந்தட மலை அன்னானை எதிர்கொண்டு , கடன்கள் யாவும்
திருந்திடச் செய்து , செவ்வித் திரு முகம் நோக்கிச் செப்பும் .

பொருள் · Meaning in Tamil

அந்த இராவணன் எய்தலோடும் - அந்த (அரக்கர் தலைவன்) இராவணன் சென்று சேர்ந்தவுடன்; இருந்த மாரீசன் - அங்கிருந்த மாரீசன்; பொருந்திய பயத்தன் - அச்சம் அடைந்தவனாய்; சிந்தை பொருமுற்று - மனம் வெதும்பி; வெருவுகின்றான் - கலக்கம் அடைந்தவனாய்; கருந்தட மலை அன்னானை - கரிய பெரிய மலை போன்ற இராவணனை; எதிர் கொண்டு - முன் சென்று வரவேற்று; கடன்கள் யாவும் திருந்திடச் செய்து - சிறப்பான முறையில் உபசரணைகள் ஆற்றி; செவ்வித் திருமுகம் நோக்கி - பொலிவு மிக்க இராவணன் முகம் பார்த்து; செப்பும் - பேசத் தொடங்கினான்.

தவநெறி மேற்கொண்டிருந்த மாரீசனுக்கு இராவணன் தனித்த வருகை மனத்தில் அச்சத்தை மூட்டியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mārīcaṉ, who was living there, as soon as that Irāvaṇaṉ arrived,
  2. was seized with fear; his mind in turmoil, trembling,
  3. he went out to meet the one who was like a great black mountain, performed
  4. every courtesy properly, and, looking at his splendid face, spoke.

What the poem says

When Irāvaṇaṉ arrives, Mārīcaṉ is frightened and troubled; a visit from the king, alone and unannounced, can only mean trouble for an ascetic like him.

Still, he goes out to receive the giant, dark as a black mountain, offers him all the proper hospitality, and then, looking at his face, begins to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irunta mārīcaṉ, anta irāvaṇaṉ eytalōṭum,
poruntiya payattaṉ, cintai porumuṟṟu, veruvukiṉṟāṉ,
karuntaṭa malai aṉṉāṉai etirkoṇṭu, kaṭaṉkaḷ yāvum
tiruntiṭac ceytu, cevvit tirumukam nōkkic ceppum.