கம்பராமாயணம் 3322 · ஆரணிய 7.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனைத்தும் ஆனது - (நிகழ வேண்டாதன) பலவும் நிகழ்ந்து விட்டன; ஆவி தரித்தேன் - எனினும் உயிர் பிழைத்திருந்தேன்; அயர்கின்றேன் - இன்னும் தளர்ச்சியுறுகின்றேன்; பொற்பும் போனது - என் பொலிவும் நீங்கியது; புகழோடும் மேன்மையும் அற்றேன் - என் பெருமைகளும், புகழும் அகன்றன; யான் இன்று உனக்கு - நான் இப்போது உன் பால்; இனி அது எங்ஙன் உரைக்கேன் - இனி அது பற்றி எவ்வாறு எடுத்துச் சொல்வேன்?; என்னா - என்று கூறி; வானவருக்கும் - தேவர்களுக்கும்; நாண அடுக்கும் வசை - வெட்கம் ஏற்படுத்தும் இழிவு அது என்றான். (மன்னோ - அசை.
மாரீசனின் அன்பைப் பெறும் பொருட்டுத் தன் நிலையை இவ்வாறு தாழ்த்தித் தெரிவித்தான், இராவணன்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Everything has happened; I have kept my life, but I am failing;
- my splendour is gone; I have lost my greatness along with my fame;
- how can I tell it to you today? From now on,' he said,
- 'it is a disgrace that would shame even the gods.'
What the poem says
Irāvaṇaṉ begins with a lament. Everything that should never have happened has happened. He is still alive, but he is wasting away, his splendour, greatness and fame all gone.
He hardly knows how to tell Mārīcaṉ, he says, because the disgrace is one that would make even the gods ashamed. By humbling himself like this, he hopes to win his uncle's sympathy.