கம்பராமாயணம் 3323 · ஆரணிய 7.174

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வன்மை தரித்தோர்மானிடர் ; மற்று அங்கு அவர் , வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் ;
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர்
புன்மை தெரிப்பின் வேறு இனி மற்று என் ? புகழ் வேலோய் .

பொருள் · Meaning in Tamil

வேலோய் - வேலேந்தியவனே; மானிடர் வன்மை தரித்தோர் - மனிதர்கள் வல்லமை உடையோர் ஆயினார்; மற்று அங்கு அவர் - மேலும் அக்கானகத்தில் அவர்கள்; வாளால் - தம் வாள் வலிமையால், நின் மருகிக்கும் - உன் மருமகள் முறைமை வாய்ந்த சூர்ப்பணகைக்கும்; நாசி இழக்கும் நிலை - மூக்கை இழக்கின்ற நிலையினை; நேர்ந்தார் - உண்டு பண்ணிவிட்டனர்; தெரிப்பின் - ஆய்ந்து பார்த்தால்; என் மரபுக்கும் - என் பரம்பரைக்கும்; நின் மரபுக்கும் - (எனக்கு உறவாகிய) உன் பரம்பரைக்கும்; இதன் மேல் ஓர் புன்மை - இதனைக் காட்டிலும் ஒரு பேரிழிவு; இனி வேறு எற்றே - இனி வேறு என்ன இருக்கிறது; புகல் - சொல்லுவாயாக.

மானுடர் என இராமலக்குவரைக் குறித்தான். மாரீசன் மாமன் முறை என்பதால் சூர்ப்பணகையை மருகி என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Men have taken on strength; and there, with a sword,
  2. they brought it about that even your niece should lose her nose;
  3. if one looks into it, what greater shame than this
  4. could there now be for my line and for yours? Tell me, you of the spear.'

What the poem says

Irāvaṇaṉ tells Mārīcaṉ that mere humans have grown bold enough to cut off the nose of Mārīcaṉ's own niece, Cūrppaṇakai, with a sword.

He asks what worse shame could fall on his family and on Mārīcaṉ's. The humans are Irāmaṉ and Ilakkuvaṉ; Cūrppaṇakai is Mārīcaṉ's niece because Mārīcaṉ is the brothers' maternal uncle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉmai tarittōr māṉiṭar; maṟṟu aṅku avar, vāḷāl
niṉ marukikkum nāci iḻakkum nilai nērntār;
eṉ marapukkum niṉ marapukkum itaṉmēl ōr
puṉmai terippiṉ vēṟu iṉi eṟṟē? pukal vēlōy.