கம்பராமாயணம் 3327 · ஆரணிய 7.178

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மன்னா ! நீ நின் வாழ்வை முடித்தாய் ! மதி அற்றாய் ,
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் ;
இன்னாதேனும் யான் இது உரைப்பன் இதம் என்னச்
சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம் .

பொருள் · Meaning in Tamil

மன்னா - வேந்தனே; நீ உன் வாழ்வை முடித்தாய் - நீ உன் வாழ்க்கைக்கு முடிவு தேடிக் கொண்டாய்; மதியற்றாய் - அறிவை அழித்து விட்டாய்; உன்னால் அன்று ஈது - இந்நிலை உன்னால் உண்டானதல்ல; ஊழ்வினை என்றே உணர்கின்றேன் - விதியின் வலியென்றே கருதுகின்றேன்; இன்னாதேனும் - உனக்கு இனிமையானவையல்லவெனினும்; யான் இது இதம் உரைப்பென் - நான் இதனை உனக்கு நலம் கருதிக் கூறுவேன்; என்னா - என, (மாரீசன்); அன்னவனுக்கு - இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதிப் பொருள்கள் எல்லாம்; சொன்னான் - கூறலானான். (அன்றே - தேற்றம்)

இராவணனின் தவறான மனநிலைக்கு விதிதான் காரணமென உணர்ந்து கூறினான் மாரீசன். ஆவது அறிவதே அறிவு; இராவணன் அழிவுக்கு வழி தேடுவதால் 'மதியற்றாய்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'King! You have brought your life to its end! You have lost your wits;
  2. I understand that this is not your doing but the working of fate;
  3. though it may be unpleasant, I will tell you this for your good,' he said,
  4. and told him all that was sure and true.

What the poem says

Mārīcaṉ tells Irāvaṇaṉ bluntly that he has sealed his own doom and lost his reason. He does not blame Irāvaṇaṉ himself, he says; it must be fate working through him.

Even though it will not be pleasant to hear, he will speak for the king's good, and he goes on to give him firm and honest counsel. True wisdom is knowing what will come of an act; Irāvaṇaṉ is heading for ruin, so he has 'lost his wits'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṉā! nī uṉ vāḻvai muṭittāy! mati aṟṟāy,
uṉṉāl aṉṟu ītu ūḻviṉai eṉṟē uṇarkiṉṟēṉ;
iṉṉātēṉum yāṉ itu uraippeṉ itam eṉṉā
coṉṉāṉ aṉṟē aṉṉavaṉukkut tuṇivu ellām.