கம்பராமாயணம் 3331 · ஆரணிய 7.182

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் ;
இந்திரன் ஒப்பார் எத்தனையோர் தாம் இழிபு உற்றார் ?
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் ?
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் , மதி அற்றாய் .

பொருள் · Meaning in Tamil

அந்தரம் உற்றான் - வானுலகுக்கு உரிய இந்திரன்; அகலிகை பொற்பால் அழிவுற்றான் - அகலிகை அழகினால் பெருமை அழிந்தான்; இந்திரன் ஒப்பார் - அவ்விந்திரனுக்கு ஒப்பானவர்கள்; எத்தனையோர்தாம் - எத்தனையோ பேர்கள்; இழிவுற்றார் - (பிறன்மனை நயத்தலால்) தீமையுற்றவர்கள்; மதியற்றாய் - அறிவு இழந்தவனே; செந்திரு ஒப்பார் - திருமகளுக்கு நிகரானவர்கள்; எத்தனையோர் நின்திரு உண்பார் - எத்தனையோ பெண்கள் (விரும்பி) உன் செல்வத்தை அனுபவிக்கின்றார்கள்; (அவ்வாறிருக்க); மந்திரம் அற்றார் - அறிவுரை கூறும் நல்லமைச்சரைப் பெறாதார்; உற்றது உரைத்தாய் - பேசத்தக்க ஒன்றை (நீயும்) பேசுகின்றனையே.

இந்திரன் அகலிகை கதை பால காண்டத்துள் அகலிகைப் படலத்தில் எடுத்துரைத்தார். உன்னை விரும்புவோர் பலரிருக்க, அழிவும் இழிவும் தருமாறு பிறன் மனை நயத்தல் ஏன் என மாரீசன் வினவினான். நல்லுரை கூறும் அமைச்சர் உனக்கு வாய்க்கவில்லையா? அன்றி அமைச்சர்களின் அறிவுரையை நீ மதிக்கவில்லையோ என்று கேளாமல் கேட்கிறான் மாமன் மாரீசன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The lord of the sky was ruined by Akalikai's beauty;
  2. how many like Intiraṉ have been brought low?
  3. How many women like the radiant Lady Tiru share your fortune?
  4. You have spoken what men without good counsel would say; you have lost your wits.'

What the poem says

Mārīcaṉ gives an example. Indra, king of heaven, was disgraced through his desire for Akalikai, the sage Gautama's wife, and many others like him have been brought down the same way.

Irāvaṇaṉ already has countless women as lovely as Lakṣmī enjoying his wealth, so why should he court ruin by desiring another man's wife? His words, Mārīcaṉ says, sound like those of a king who has no wise ministers, or one who ignores them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antaram uṟṟāṉ akalikai poṟpāl aḻivuṟṟāṉ;
intiraṉ oppār ettaṉaiyōrtām iḻivuṟṟār?
cen tiru oppār ettaṉaiyōr niṉ tiru uṇpār?
mantiram aṟṟār uṟṟatu uraittāy, mati aṟṟāy.