கம்பராமாயணம் 3333 · ஆரணிய 7.184
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றால் - இவ்வாறு நான் அறிவுரை கூறினாலும்; என்னே நீ எண்ணலையோ - ஏனோ நீ சிந்தித்துப் பார்க்க மறுக்கின்றாயே; நின் தானைக்கு மேல் என்னும் நிலை உளன் - உன் படைகளுக்குத் தலைவனாக உயர் நிலையில் இருந்த; கரன் என்பான் - கரன் என்னும் வீரன்; தன் தானை - தன் சேனைகளோடும்; திண் தேரொடும் மாள - வலிமை மிக்க தேர்ப் படைகளோடும் அழியும்படி; தனு ஒன்றால் கொன்றான் - ஒப்பற்ற தன் வில்லால் கொன்ற இராமன்; முற்றும் கொல்ல - அரக்கர் இனம் முழுதையும் அழிக்க; மனத்தில் குறி கொண்டான் - இப்போது மனத்திற் கருதி இருக்கின்றான்; அம்மா - இந்நிலை இரங்கத்தக்கது.
கரன் முதலியோரை அழித்தமை அவன் கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன் என்பதைக் காட்டும். அவ்வாறிருந்தும் நீ அறிவு பெற்றாய் இல்லை என்றான் மாரீசன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Why, will you not think of it at all? The one called Karaṉ,
- who held a place above your whole army, alas!,
- he killed with a single bow, so that he died with his host and his strong chariots;
- and he has set his mind on killing every one of us.'
What the poem says
Mārīcaṉ asks why Irāvaṇaṉ will not think. Karaṉ, who ranked above all his other commanders, was killed together with his army and chariots by Irāmaṉ's single bow.
Now, he says, Irāmaṉ has resolved to destroy the whole rākṣasa race. Killing Karaṉ's army alone shows that Irāmaṉ needs no allies to win, yet Irāvaṇaṉ has not learned from it.