கம்பராமாயணம் 3334 · ஆரணிய 7.185

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெய்யோர் யாரே வீர விராதன் துணை வெய்யோர் ?
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் ; என்றால் ,
' உய்வார் யாரே ? நம்மின் ' எனக் கொண்டு , உணர்தோறும்
நையா நின்றேன் ; நீ இது , உரைத்து நலிவாயோ ?

பொருள் · Meaning in Tamil

வெய்யோர் - கொடியவர்களில்; வீர விராதன் துணை வெய்யோர் - வீரனாகிய விராதனுக்கு இணையான கொடியவர்; யாரே - யார் உளர்?; அம்பொடும் - (இராமபிரான்) அம்பினால்; ஐயோ - என்ன பரிதாபம்!; உம்பர்க்கு அவன் போனான் என்றால் - வானுலகுக்கு அவனும் கொல்லப்பட்டுச் சென்றான் எனில்; நம்மில் யாரே உய்வார் - (அவ்விராமனிடமிருந்து) நம்மவரில் யார்தான் தப்பிப் பிழைக்க முடியும்?; எனக்கொண்டு - என்று கருதி; உணர்தோறும் நையா நின்றேன் - எண்ண, எண்ண நொந்திருக்கின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? - இப்போது (இவ்வாறு என்னிடம்) மேலும் கூறி என் வருத்தத்தை மிகுதிப்படுத்துவாயோ?

விராதன் வதை நமக்கு ஒரு பாடமன்றோ என மாரீசன் எடுத்துக் கூறினான். விராதனை இராமலக்குவர் வாளால் அழித்தனர். (2550) இங்கே அம்பு என்றது ஆயுதம் என்ற பொருளில் கொள்ளத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Who among the fierce is as fierce as the hero Virātaṉ?
  2. Alas, he went to the heavens by an arrow! If so,
  3. "Who among us will survive?" I think, and each time I think of it
  4. I am wasting away; will you torment me further by saying this?'

What the poem says

Mārīcaṉ brings up Virātaṉ, the fiercest of demons, whom Irāmaṉ dispatched to heaven earlier in the forest. If even Virātaṉ could not survive Irāmaṉ, which of them can hope to?

Every time he thinks of it, Mārīcaṉ says, he is sick with dread, and now Irāvaṇaṉ is making it worse. Virātaṉ was in fact killed by the brothers' swords; 'arrow' here stands for weapons in general.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyyōr yārē vīra virātaṉ tuṇai veyyōr?
aiyō pōṉāṉ ampoṭum umparkku avaṉ; eṉṟāl,
' uyvār yārē? nammil ' eṉak koṇṭu, uṇartōṟum
naiyāniṉṟēṉ; nī itu, uraittu nalivāyō?