கம்பராமாயணம் 3335 · ஆரணிய 7.186

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாண்டார் மாண்டார் - ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து போயினர்; இனி நீ - இனிமேல் நீ; மாள்வார் தொழில் செய்ய - மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய; வேண்டா வேண்டா - (அருள் கூர்ந்து) முற்பட வேண்டாம்; செய்திடின் - நீ அவ்வாறு செய்வாயானால்; உய்வான் விதி உண்டோ - தப்பிப் பிழைக்க வழியும் உண்டோ? (இல்லை); ஆண்டார் ஆண்டார் - உனக்கு முன்னே இவ்வுலகை ஆண்டு சென்றோர்; எத்தனை என்கேன் - எத்தனையென்று கணக்குரைக்க முடியாது; அறம் நோனார் - அறத்தை நோற்காதவர்; ஈண்டார் - நிலை பெற்று நின்றதில்லை; ஈண்டு ஆர் நின்றவர் - (மேலும்) இவ்வுலகில் அழியாது நிலைத்தாரும் யாரும் இல்லை; எல்லாம் இலர் அன்றோ? - எல்லாரும் இல்லாமல் மறைந்தவர்கள் தானே?

அழிகின்றவர் செய்யும் செயலை நீயும் செய்யாதே. அறவழி நிற்போரே உண்மையில் அழியாதார். மற்றொன்று, யாக்கை நிலையாமை உணர்ந்து உண்மைகளைத் தேறுதல் வேண்டும் என மாரீசன் பலவாறு அறம் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those who are dead are dead; from now on, do not, do not
  2. do what is done by those about to die; if you do it, is there any fate that will save you?
  3. How many have ruled and ruled, shall I tell? Those who do not keep dharma
  4. have not lasted, have not lasted; all who stood here, are they not gone?'

What the poem says

Mārīcaṉ pleads: what is past is past, and the dead are dead. Irāvaṇaṉ must not now do the kind of deed that only doomed men do, because there will be no escape if he does.

Countless kings have ruled before him; those who did not keep to dharma did not last, and in the end everyone who ever stood on this earth has passed away. The doubled words carry his urgency. Only those who hold to virtue truly endure.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṇṭār māṇṭār; nī iṉi māḷvār toḻil ceyya
vēṇṭā vēṇṭā; ceytiṭiṉ uyvāṉ viti uṇṭō?
āṇṭār āṇṭār ettaṉai eṉkēṉ; aṟam nōṉār
īṇṭār īṇṭār; niṉṟavar ellām ilar aṉṟō?