கம்பராமாயணம் 3336 · ஆரணிய 7.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எம்பிக்கும் - என் தம்பி சுபாகுவுக்கும்; என் அன்னை தனக்கும் - என் தாய் தாடகைக்கும்; இறுதிக்கு - உயிருக்கு அழிவு நேரும்படி; ஓர் அம்பு உய்க்கும் - ஒப்பற்ற தன் இராம பாணத்தை ஏவிய; போர் வில்லி தனக்கும் - போராற்றல் வாய்ந்த வில்லாளியான இராமனுக்கும்; அயல் நிற்கும் தம்பிக்கும் - அவன் அருகிலேயே இருக்கும் தம்பி இலக்குவனுக்கும்; என் ஆண்மை தவிர்ந்தே - என் வீரம் பின்னடைந்து; தளர்வுற்றேன் - மெலிந்துள்ளேன்; அவன் என்றே - அந்த இராமன் அல்லவா (உனக்கும் பகையாவான்) என்று; கம்பிக்கும் என் நெஞ்சு - என் மனமும் மிக நடுங்கும்; கவல்கின்றேன் - (விளைவு எண்ணிக்) கவலையும் கொள்ளுகின்றேன்.
'முன்னர் ஏற்பட்ட அனுபவத்தால் இராமனின் வல்லமையை நான் அறிவேன். அதனால் கலங்குகின்றேன்' என்றான் மாரீசன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Before the warrior with the bow, who sent an arrow to end
- my younger brother and my mother, and before the brother who stands at his side,
- my manhood has left me and I have grown weak;
- my heart trembles; it is he, I think, and I am full of dread.'
What the poem says
Mārīcaṉ speaks from experience. Irāmaṉ killed his mother Tāṭakai and his brother Cupāku with his arrows, and in front of Irāmaṉ and his brother Ilakkuvaṉ all his own courage drained away.
Now, knowing that this same Irāmaṉ is the enemy Irāvaṇaṉ wants to provoke, his heart shakes with fear of what will follow.