கம்பராமாயணம் 3337 · ஆரணிய 7.188

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
பாட வேறுபாடு · Project Madurai reads
1நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையா ஆய்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் ! புலையாள் தன் கு
ஒன்றும் உன்னாய் ; என் உரை கொள்ளாய் ; உயர் செல்வத்து
' என்றும் என்றும் வைகுதி ; ஐயா ! இனி ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

நின்றும் சென்றும் வாழ்வன யாவும் - தாவர சங்கமம் என்று கூறப்படும் நிலையியல் இயங்கியல் பொருள்கள் எவையும்; நிலையா - நிலைத்து நிற்கமாட்டா; பொன்றும் - அழிந்தே தரும்; என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் - என்னும் உண்மையை நீ உணர்ந்திருக்கிறாய்; புலை ஆடற்கு ஒன்றும் உன்னாய் - தீயன செய்தற்குச் சிறிதும் சிந்தியாதவனாய்; என் உரை கொள்ளாய் - என் பேச்சைக் கேட்பாயாக, இனி ஐயா - இனிமேலேனும், தலைமைக்கு உரியாய்; உயர் செல்வத்து - ஓங்கிய செல்வங்களோடு; என்றும் என்றும் வைகுதி - எப்போதும் எந்நாளும் இனிதே வாழ்வாயாக, என்றான் - என (மாரீசன்) எடுத்துரைத்தான்; ஆல் - அசை.

'உலகில் எப்பொருளும் நிலையாமையை உணர்ந்து நன்னெறி நின்று நலமுடன் வாழ்க' என வேண்டினான் மாரீசன். இராவணனின் அருந்தவம், அது தந்த பெரு வாழ்வு, அறநெறி தவறுதலால் விளையும் அழிவு, இந்திரன் போன்றோர் காமத்தால் வீழ்ந்தமை, கரன் முதலியோரை அழித்த இராமன் வலிமை எனப் பல நிலைகளிலும் மாரீசன் சிந்தித்து அறிவுரை கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who know the truth that all that lives, standing still or moving,
  2. does not last but perishes! Give no thought at all
  3. to base deeds; take my words; in your high fortune
  4. may you live on forever and ever, my lord, from now on,' he said.

What the poem says

Mārīcaṉ ends his counsel. Irāvaṇaṉ knows that every living thing, whether rooted or moving, is impermanent and must die. So let him put away all thought of this vile deed, take his uncle's advice, and live on in his great prosperity for ever.

Across these verses Mārīcaṉ has argued from every angle: Irāvaṇaṉ's penance and the fortune it brought, the ruin that follows a breach of dharma, the fall of Indra through lust, and Irāmaṉ's proven power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟum ceṉṟum vāḻvaṉa yāvum nilaiyāvāl
poṉṟum eṉṉum meymmai uṇarntāy! pulai āṭaṟku
oṉṟum uṉṉāy; eṉ urai koḷḷāy; uyar celvattu
' eṉṟum eṉṟum vaikuti; aiyā! iṉi ' eṉṟāṉ.