கம்பராமாயணம் 3342 · ஆரணிய 7.193

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'' ''

பொருள் · Meaning in Tamil

யாதும் அறியாய் - இராமன் வலிமை முதலானவற்றை முழுதும் அறியாதவன் நீ; உரை கொளாய் - எடுத்துச் சொன்னாலும் உணர மறுக்கிறாய்; இகல் இராமன் கோதை புனையா முன் - உன் பகையாய் நீ கருதும் இராமன் போர் புரியத் தும்பை மாலை சூடு முன்; உயிர் கொள்ளை படும் அன்றே - அவன் பகைவர் உயிர் சூறையாடப்படும் அன்றோ?; பேதை மதியால் - அறியாமை கொண்ட மதியால்; இஃது ஓர் பெண் உருவம் என்றாய் - (சீதையை) ஒரு மனிதப் பெண்ணாக மதித்திருக்கின்றாய்; அது சீதை உருவோ? - உண்மையில் அது சீதையின் வடிவமோ? (அன்று); நிருதர் தீவினை அன்றோ - அரக்கர் இழைத்த பாவத்தின் வடிவம் அன்றோ?!

தானும் அறியான், சொல் புத்தியும் கேளான் என இராவணனை இகழ்ந்தான் மாரீசன். இராமன் போருக்கு மாலை சூடு முன்பே பகைவர் உயிரிழப்பர் என அவன் ஆற்றலின் மிகுதி கூறினான். கோதை - மாலை. இங்கே அதிரப் பொருவதற்கு அடையாளமாகிய தும்பைப் பூ மாலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You know nothing; you will not take advice; before the warrior Irāmaṉ
  2. has even put on his battle garland, lives will be plundered!
  3. In your foolish mind you have said, "This is a woman's form";
  4. is that the form of Cītai? Is it not the evil deeds of the rākṣasas?'

What the poem says

Mārīcaṉ scolds Irāvaṇaṉ for knowing nothing and refusing advice. Before Irāmaṉ has even put on the tumpai garland that warriors wear into battle, his enemies' lives will already be gone.

Irāvaṇaṉ foolishly thinks Cītai is just a woman. Mārīcaṉ tells him she is something else: the very shape of the rākṣasas' accumulated sins, come to destroy them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' yātum aṟiyāy; urai koḷāy; ikal irāmaṉ
kōtai puṉaiyāmuṉ uyir koḷḷaipaṭum aṉṟē!
pētai matiyāl '' iḵtu ōr peṇ uruvam '' eṉṟāy!
cītai uruvō? nirutar tīviṉai atu aṉṟō?