கம்பராமாயணம் 3344 · ஆரணிய 7.195
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் - சிவபெருமான் முதல் தேவர் உலகு வரை; மற்றைத் தேசம் முதல் முற்றும் - வேறு பகுதிகளையும் சேர்த்து முழுவதிலுமாய்; கோசிகன் அளித்த கடவுட் படை - விசுவாமித்திர முனிவனால் வழங்கப்பட்ட தெய்வ அம்புகள்; கொதிப்போடு - பொங்கும் அனலோடு; ஓர் இமைப்பின் உயிர் தின்ப - இமைப் பொழுதில் உயிரைப் பருகி முடிக்கும் வல்லமை உடையன; ஆசில - குற்றம் (தோல்வி) அறியாதவை; கணிப்பு இல - கணக்கில்லாதவை; இராமன் அருள் நிற்ப - இராமபிரானிடம் (ஏவல் பூண்டு) அருள் காத்து நிற்பனவாம்.
தாடகை வதம் முடிந்து வேள்வி காத்தபின் விசுவாமித்திரரும், முனிவரும் அளித்த தெய்வப் படைகள் பல இராமனிடம் பொருந்தி உள்ளன. இது குறித்துப் பால காண்டம் வேள்விப் படலம் (894, 395, 396). கௌசிகன் - விசுவாமித்திர முனிவர் குசிகன் குலத்தில் பிறந்தோன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The divine weapons that Kōcikaṉ gave, which in a single blink
- would devour the lives of Īcaṉ and the rest, the world of the gods,
- and every other land besides, blazing,
- flawless, countless, stand awaiting Irāmaṉ's word.
What the poem says
Mārīcaṉ describes the celestial weapons that the sage Vicuvāmittiraṉ, here called Kōcikaṉ after his ancestor Kuśika, gave Irāmaṉ after he protected the sage's sacrifice.
They are beyond counting and never fail. Blazing with fire, they could swallow in the blink of an eye the lives of Śiva, the gods and every other world. And they stand ready, waiting only for Irāmaṉ's command.