கம்பராமாயணம் 3346 · ஆரணிய 7.197
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேதனை செய் காம விடம் - துயரம் தருகின்ற காமம் என்ற நஞ்சு; மேலிட மெலிந்தாய் - மிகுதிப்படச் சோர்வுற்றாய்; தீது உரை செய்தாய் - கொடுஞ் சொற்களையும் கூறினாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ - இவ்வாறு செய்தல் அழிவு ஆகுமன்றோ?; மாதுலனும் ஆய் - உனக்கு மாமன் உறவுடையவனாய், மரபின் முந்தை உற வந்தேன் - உன் குலத்தில் முந்திப் பிறந்தவனானேன்; ஈது உரை செய்தேன் - இம்மொழிகளை உனக்குச் சொன்னேன்; எந்தை - என் ஐயா; அதனைத் தவிர்க - இத்தீய கருத்தை விட்டு விடுக; என்றான் - என (மாரீசன் இராவணனுக்கு மறுபடியும் அறிவுரை பகன்றான்.
உன் குலத்து முந்தியவன் என்பதால் நீ என்னைக் கடிந்த போதும் நல்லன கூறினேன் என அறிவுரை கூறினான் மாரீசன். மாதாவின் உடன் பிறப்பு மாதுலன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have wasted away as the tormenting poison of lust took hold;
- you have spoken evil; is not such conduct ruin?
- Being your mother's brother, born before you in our line,
- I have told you this; my lord, give it up,' he said.
What the poem says
Mārīcaṉ makes a final plea. The poison of lust has worn Irāvaṇaṉ down and made him speak wickedly, and acting on it will be his ruin.
As his maternal uncle and an elder of the family, Mārīcaṉ says, he has a duty to speak plainly even when rebuked. He begs Irāvaṇaṉ to give up the plan.