கம்பராமாயணம் 3347 · ஆரணிய 7.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ன, உரை அத்தனையும் - என்று மாரீசன் சொன்ன கூற்றுகள் அனைத்தையும்; எத்தனையும் எண்ணிச் சொன்னவனை - சிறிதேனும் எண்ணிப் பார்க்கும்படிக் கூறிய மாரீசனை; ஏசின - இகழ்ந்த; அரக்கர்பதி சொன்னான் - அரக்கர் தலைவனாகிய இராவணன் கூறலானான்; 'அன்னை உயிர் செற்றவனை - உன் தாய் தாடகையின் உயிரை அழித்தவனை; அஞ்சி உறைகின்றாய் - எண்ணி அச்சமுற்று இன்னும் உயிர்வாழ்கின்றாய்; உன்னை - (அப்படிப்பட்ட) உன்னை; ஒருவற்கு ஒருவன் என்று - ஓர் ஆண்மையாளன் என்று; உணர்கை நன்றோ - நினைப்பது பொருத்தமாகுமா? (ஆகாது என்றபடி).
தாயைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்காத நீயும் ஆண் மகன்தானா என மாரீசனிடம் இராவணன் வினவினான். ஒருவற்கு ஒருவன் - இணையான சிறப்புள்ள வீரன் என மதித்தல் எனப் பொருள் பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had said all this, the lord of the rākṣasas, scorning the one
- who had spoken every word of it after weighing it all, said:
- 'You live on in fear of the one who took your mother's life;
- is it right to count you as a man fit to face any man?'
What the poem says
Irāvaṇaṉ dismisses all of Mārīcaṉ's carefully reasoned advice with contempt. Mārīcaṉ, he sneers, still lives in fear of the man who killed his own mother, Tāṭakai.
How could anyone think of such a coward as a real warrior, a match for another man? The taunt is aimed at Mārīcaṉ's honour as a son and a fighter.