கம்பராமாயணம் 3349 · ஆரணிய 7.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூவுலகினுக்கும் - மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களுக்கு; ஒரு நாயகம் - தனி நாயகனாய்; முடித்தேன் - வெற்றி பெற்று முடித்தேன்; (அத்தகைய எனக்கு); மேவலர் கிடைக்கின் - (இன்னும் வெல்லுதற்குப்) பகைவர் கிடைப்பாராயின; இதன் மேல் இனியது உண்டோ - அதனினும் இனிதான ஒன்று வேறு உண்டோ; எனது ஆணை வழி ஏவல் செயகிற்றி - என் கட்டளைப்படி ஏவல் செய்வாயாக; எண்ணிக்காவல் செய் அமைச்சர் கடன் - சிந்தனை செய்து அரசுக்குப் பாதுகாப்புச் செய்யும் அமைச்சர் பொறுப்பை; நீ கடவது உண்டோ - நீ செய்யக் கருதுதல் பொருந்துமோ? (பொருந்தாது).
என் பணி செய்வதே உன் கடமை. அறிவுரை மொழியும் அமைச்சர் பொறுப்பு உனக்கு உரியதன்று என்று மாரீசனுக்கு இராவணன் கூறினான்.
(அறிவுடைய அமைச்சன் நீ அல்லை) (7361) எனக் கும்பகருணனிடமும் இராவணன் கூறுதல் ஒப்புநோக்கத் தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I have made myself sole lord of all three worlds;
- if I can still find foes, what could be sweeter than that?
- Do as you are bidden, following my command; to weigh things
- and guard the realm is a minister's duty: is it yours to take on?
What the poem says
Irāvaṇaṉ answers Mārīcaṉ, who has been warning him against carrying off Cītai. He has conquered the upper, middle and lower worlds, and would welcome fresh enemies.
Mārīcaṉ's place, he says, is to obey, not to advise like a counselling minister. The commentary compares the later scene where Irāvaṇaṉ tells Kumpakaruṇaṉ too that he is no wise minister.