கம்பராமாயணம் 3357 · ஆரணிய 7.208

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆனவன் உரைக்க , நக்க அரக்கர் கோன் ,' அவரை வெல்லத்
தானையும் வேண்டுமோ ? என் தடக்கை வாள் தக்கது அன்றோ !
ஏனையர் இறக்கில் , தானும் தமியளாய் , இறக்கும் அன்றே
மான் அவள் ; ஆதலாலே மாயையின் வலித்தும் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

ஆனவன் உரைக்க - உறவுடையவனான மாரீசன் இவ்வாறு கூறுதலும்; நக்க அரக்கர் கோன் - அது கேட்டுச் சிரித்த இராவணன்; அவரை வெல்ல - அம் மானுடரை வெற்றி கொள்ள; தானையும் வேண்டுமோ - சேனையும் அவசியம் தானோ?; என் தடக்கை வாள் தக்கது அன்றோ - என் வலிமைமிக்க கரங்களில் ஏந்திய வாள் ஒன்றுமே போதாதோ? (போதும் என்றாலும்); ஏனையர் இறக்கின் - தன்னைச் சார்ந்த இராமலக்குவர் மாய்வராயின்; மானவள் - மானுடப் பெண்ணான சீதையும்; தானும் தமியளாம் - தானும் தனித்திருக்கும் நிலை கருதி; இறக்கும் அன்றே - மடிந்து போவாள் அல்லவா?; ஆதலாலே மாயையின் வலித்தும் - அக்காரணத்தால் அவளை மாய வஞ்சனையில் கைப்பற்றுவோம்; என்றான் - என்று சொன்னான்.

மானவள் - மானுடப் பெண்; மான் போன்றவள், மானம் மிக்கவள் எனப் பல பொருள் விரிக்க இடம் தருகிறது. வஞ்சனை செய்ய வாய்ப்பான காரணம் கற்பிக்கின்றான் இராவணன். வஞ்சனைச் செயலுக்குச் சீதையிடம் இராவணன் வேறு ஒரு காரணம் சொல்வதை இராவணன் சூழ்ச்சிப்படலத்தில் காணலாம். (3401)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said so, the demon king laughed: 'To conquer them
  2. do I even need an army? Is not the sword in my mighty hand enough?
  3. But if the others die, she too, left alone, will die, will she not,
  4. that deer-like woman? Therefore we will take her by illusion,' he said.

What the poem says

Irāvaṇaṉ laughs at the idea that he needs an army: his sword alone could kill the two brothers. But if Irāmaṉ and Ilakkuvaṉ die, Cītai, left alone, will die too, so he must take her by deceit.

The word māṉavaḷ can mean a human woman, a woman like a deer, or a woman of great honour. Irāvaṇaṉ is inventing a reason that makes trickery look necessary.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉavaṉ uraikka, nakka arakkarkōṉ,' avarai vellat
tāṉaiyum vēṇṭumō? eṉ taṭakkai vāḷ takkatu aṉṟō!
ēṉaiyar iṟakkiṉ, tāṉum tamiyaḷāy, iṟakkum aṉṟē
māṉavaḷ; ātalālē māyaiyiṉ valittum ' eṉṟāṉ.