கம்பராமாயணம் 3358 · ஆரணிய 7.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவியைத் தீண்டா முன்னம் - இராமன் துணைவியான சீதையைத் தொடு முன்னரே; இவன் தலை சரத்தின் சிந்தி - இவ்விராவணன் தலைகளை இராமன் அம்பால் வீழ்த்தி; போம் வகை புணர்ப்பன் - விழும் வகையைச் செய்யலாம்; என்று புந்தியால் புகல்கின்றேற்கும் - என்று தந்திரத்தால் சொல்ல வல்ல எனக்கும்; ஆம் வகை ஆயிற்று இல்லை - (அதனைச் செய்து) பிழைக்கும் வழி புலனாகவில்லை; விதி விளைவை ஓர்வார் யார்? - விதியின் செயல்பாட்டை முற்றும் அறிந்தவர் யார்?; ஏவிய செய்வது அல்லால் - இராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதல்லாமல்; வேறுஒன்று இல்லை - வேறு செய்தற்கு ஏதும் வழி இல்லை; என்று எண்ணா - என்று சிந்தித்தவனாய்.........
(அடுத்த பாடலில் கருத்து முடியும்) தொடக்கத்தில் இராமனுடன் போர் செய் என்று மாரீசன் தூண்டியது ஒருவகைச் சூழ்ச்சியே. போர் வருமாயின் இராவணன் மடிவான். நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவன் திட்டம். அது பலிக்கவில்லையென்பதால் இராவணன் ஏவலைச் செய்ய முடிவு செய்கிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Before he touches the queen, that his heads should be scattered by arrows
- and fall, I sought to bring about by craft, but for me, who speak so cleverly,
- no way has opened. Who can foresee what fate will bring?
- There is nothing else but to do as I am bidden,' he thought.
What the poem says
Mārīcaṉ reflects privately. By urging Irāvaṇaṉ to fight Irāmaṉ openly he had hoped the king would be killed before ever touching Cītai, and that he himself would survive.
The scheme has failed, and no one can see where fate leads. He decides he has no choice but to obey. The thought is completed in the next verse.